2018 ஆம் ஆண்டின் மிக மோசமான பாஸ்வேர்டு: பட்டியலில் இடம்பிடித்தார் டொனால்ட்

2018 ஆம் ஆண்டில் மிக மோசமான பாஸ்வேர்டுகளை குறித்து SplashData என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது.

கலிபோர்னியா: 2018 ஆம் ஆண்டில் மிக மோசமான பாஸ்வேர்டுகளை குறித்து SplashData என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது.

பாஸ்வேர்டு வைப்பதும் ஒரு கலை தான். சிலர், பாஸ்வேர்டுகளை தெரிவு செய்வதில் மிகவும் சோம்பேறித்தனமாக இருப்பார்கள். அதிகமான மக்கள் தெரிவு செய்யும் முதல் பாஸ்வேர்டு 123456. இப்படி ஒரு பாஸ்வேர்டை நீங்களும் 2018 ஆம் ஆண்டில் தெரிவு செய்திருந்தால், அது மோசமான பாஸ்வேர்டு ஆகும். அதே நேரத்தில், எளிதில், இதுபோன்ற பாஸ்வேர்டுகள் வைக்கப்பட்டுள்ள கோப்புகளை ஹேக் செய்துவிடலாம் என்பதே அதிர்ச்சியான தகவலாகும்.

list

2018 ஆம் ஆண்டின் மோசமான 10 பாஸ்வேர்டுகள்: 

1.123456 

2 password

3.123456789 

4.12345678

5. 12345

6.111111(புதியதாக சேர்க்கப்பட்டுள்ளது)

7. 1234567

8.sunshine (புதியதாக சேர்க்கப்பட்டுள்ளது)

9.qwerty 

10.iloveyou 

அதன்படி, 123456 என்ற பாஸ்வேர்டு அதிக முறை பயன்படுத்தப்பட்டுள்ளது என அந்த ஆய்வு தெரிவித்துள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் 123456789 மற்றும் 12345678 போன்ற பாஸ்வேர்டுகள் இடம் பிடித்துள்ளன. அடுத்தபடியாக 12345,1234567,qwerty, iloveyou போன்ற  பாஸ்வேர்டுகளும் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக இந்த ஆண்டு 111111, sunshine போன்ற வார்த்தைகள் புதிதாக இந்தப் பட்டியலில் இணைந்துள்ளது. இந்நிலையில் டொனால்ட் என்ற வார்த்தையும் இந்த ஆண்டு மோசமான பாஸ்வேர்டு பட்டியலில் 23 வது இடத்தை பிடித்துள்ளது.

password

இ-மெயில், ஏடிஎம், உட்பட பல சேவைகளுக்காக பாஸ்வேர்டை பயன்படுத்துவதால் பலரும் எளிதில் நினைவிருக்கும் பெயர்களையே வைக்கிறார்கள். எனவே, இதனை எளிதாக மற்றவர்கள் ஹேக் செய்து விடுகின்றனர் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

மேலும், உங்களுக்குப் பிடித்த விளையாட்டு, பிறந்த தேதி, பிடித்த பிரபலங்களின் பெயர்கள், தட்டச்சு செய்வதற்கு எளிமையான சொற்களை பாஸ்வேர்டாக உபயோகிக்க வேண்டாம் என்றும் இதையும் மற்றவர்கள் எளிதாக யூகிக்க வாய்ப்புள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.

password1

எனவே, இவ்வாறு எளிய வார்த்தைகள் மற்றும் எண்களை பாஸ்வேர்டாக வைப்பதற்குப் பதிலாக, எண் மற்றும் எழுத்தால் இணைந்த பாஸ்வேர்டுகளை உபயோகப்படுத்தலாம் என ஆய்வை மேற்கொண்ட நிறுவனம் ஆலோசனை தெரிவித்துள்ளது. 

Most Popular

தமிழகத்தில்தான் அதிக மருத்துவர்கள் பலி! பட்டியலோடு நிரூபித்த உதயநிதி ஸ்டாலின்

தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது. தினசரி கொரோனா மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும் அளவு அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து...

இவர்களை தவிர வேறுயாரும் வெளியில் வரக்கூடாது! சென்னைவாசிகளுக்கு காவல்துறையினர் அறிவுறுத்தல்!!

சென்னை பெருநகர காவல்துறையினர் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், “சென்னையில் 08.08.2020 இரவு 12.00 மணி முதல் 10.08.2020 தேதி காலை 06.00 மணி வரை தமிழக அரசு எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு...

2 வாரங்களில் குழந்தையை பார்ப்போம் என்ற கனவுடன் இருந்த விமானி! விபத்தில் பலியான கொடுமை!!

கேரளாவின் கோழிக்கோடு விமானநிலையத்தில் நேற்றிரவு விபத்துக்குள்ளான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் மானி தீபக் வசந்த் சாதே, துணை விமானி அகிலேஷ் ஷர்மா உள்ளிட்ட 18 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த 123 பேரில்...

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி மருத்துவமனையிலிருந்து ஆட்டோவில் தப்பியோட்டம்!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி மருத்துவமனையில் இருந்து ஆட்டோவில் நெய்வேலிக்கு தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை எம்ஜிஆர் நகர் கட்டபொம்மன் தெருவை சேர்ந்த மூதாட்டி கஸ்தூரி என்பவர் கொரோனா தொற்று ஏற்பட்டு கேகே நகரில்...