2018ம் ஆண்டு யூடியூபில் மக்கள் அதிகம் பார்த்த முதல் 10 பாடல்கள் எது தெரியுமா? 

 

2018ம் ஆண்டு யூடியூபில் மக்கள் அதிகம் பார்த்த முதல் 10 பாடல்கள் எது தெரியுமா? 

2018ம் ஆண்டில் வெளியான பாடல்களில் யூடியூபில் மக்களால் அதிகம் 
பார்க்கப்பட்ட பாடல்கள் பற்றிபட்டியல் வெளியாகியுள்ளது

சென்னை: 2018ம் ஆண்டில் வெளியான பாடல்களில் யூடியூபில் மக்களால் அதிகம் 
பார்க்கப்பட்ட பாடல்கள் பற்றிபட்டியல் வெளியாகியுள்ளது. 

ஒவ்வொரு வருடமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள் வெளியாகியிருக்கின்றன. அது அனைத்துமே மனதில் நிற்கும்பாடல்களாக அமைவதில்லை.அந்தவகையில் இந்தஆண்டுவெளியான பாடல்களிலிருந்து யுடியூபில் ரசிகர்களிடம்அதிகப் பார்வைகளைப்பெற்ற பாடல்களின் முதல் 10 பாடல்களின் பட்டியலை இங்கே காண்போம். 

அதில் குலேபகாவலி படத்தில் வந்த குலேபா பாடல் 8.01 கோடியும்,அடுத்ததாக கனா  படத்தின் வாயாடி பெத்த புள்ள 7.4 கோடியும்.அதைத் தொடர்ந்து தானா சேர்ந்த கூட்டம் படத்தின் சொடக்கு மேல பாடல் 6.33 கோடி பேர் பார்த்து முதல்மூன்று இடத்தைப் 
பிடித்துள்ளது. 

அதைத்தொடர்ந்து மூன்றாவது இடத்தில் சார்லி சாப்ளின் படத்தின் சின்ன மச்சான் பாடல் 6.01 கோடியும், அடுத்ததாகசர்கார் படத்தின் சிம்டாங்காரன் 3.62 கோடியும்,சமீபத்தில் வெளியான மாரி 2 படத்தின் ரௌடி பேபி பாடல் 3.57 கோடியும்,கலகலப்பு 2 படத்தின் ஒரு குச்சி ஒரு குல்பி பாடல் 2.91 கோடி பேர் பார்த்து எட்டாவது இடத்தைப் 
பிடித்துள்ளது. 

அதையடுத்து செக்கச் சிவந்த வானம் படத்தின் மழை குருவி பாடல் 2.57 கோடியும்,இறுதியாக டிக்டிக்டிக் படத்தின்குறும்பா பாடல் 2.56 கோடி பேர் பார்த்து பத்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.இந்த ஆண்டு வெளியான பாடல்களில் நடனஅசைவு பாடல்களே 
மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது