ஏற்கனவே ( 2017) அறிவித்ததற்கு என்ன பெயர்? ரஜினிக்கு சுப.வீ. கேள்வி

 

ஏற்கனவே ( 2017) அறிவித்ததற்கு என்ன பெயர்? ரஜினிக்கு சுப.வீ. கேள்வி

நடிகர் ரஜினிகாந்த் கடந்த 31.12.2017-ல் தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்தார். கட்சி தொடங்கப்போவதாக அறிவித்த ரஜினிகாந்த், ஆன்மிக அரசியல்தான் தனது பாதை என்றும் தெரிவித்தார். ரஜினியி இந்த ஆன்மிக அரசியல் பெரும் விவாதங்கள் எழுந்தது.

கட்சி தொடங்கி சட்டப்பேரவை தேர்தலை சந்திக்கப்போவதாகவும், நாடாளுமன்றத் தேர்தல் குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என்றும் அறிவித்த ரஜினி, திமுக தலைவர் கருணாநிதி, முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் ஆகியோரை சந்தித்தார். தனது நெருக்கமான அரசியல் பிரமுகர்களிடமும் தீவிர ஆலோசனை நடத்தி வந்தார்.

ஏற்கனவே ( 2017) அறிவித்ததற்கு என்ன பெயர்? ரஜினிக்கு சுப.வீ. கேள்வி

தமிழகத்தின் தின, வார இதழ்களின் ஆசிரியர்களை அழைத்து அரசியல் பிரவேசம் குறித்து ஆலோசித்தார். கட்சி ஆரம்பிக்கப்போவதாக சொல்லி இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர், இப்போது மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய ரஜினி, எவ்வளவு சீக்கிரத்தில் அறிவிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் முடிவை அறிவிக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து திராவிடர் இயக்க தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன், “விரைவில் முடிவை அறிவிப்பேன்” என்று ரஜினி சொல்லி இருக்கிறார். அப்படி என்றால் ஏற்கனவே ( 2017) அறிவித்ததற்கு என்ன பெயர்? என்று கேட்டிருக்கிறார்.