2016ல் நடந்ததுபோல்… திமுகவுக்கு பதற்றத்தை ஏற்படுத்தும் அதிமுகவின் உற்சாகம்

2016ல் நடந்ததுபோல்… திமுகவுக்கு பதற்றத்தை ஏற்படுத்தும் அதிமுகவின் உற்சாகம்

ருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் திமுகவுக்கு ஆதரவாகவே இருந்தாலும் களத்தின் நிலைமை வேறு மாதிரியாகவே இருக்கிறது. திமுகவுக்கு இணையாகவே இருக்கிறது அதிமுகவின் பலமும்.

2016ல் நடந்ததுபோல்… திமுகவுக்கு பதற்றத்தை ஏற்படுத்தும் அதிமுகவின் உற்சாகம்

பாஜகவுடன் கூட்டணி அமைத்திருப்பதாலும் , தொடர்ந்து இரண்டு முறையாக ஆட்சியில் இருக்கிறது என்பதால் மட்டுமே அதிமுக மீது ஒரு அதிருப்தி இருக்கிறதே தவிர, பெரிதாக அதிமுக மீது அதிருப்தி ஒன்றும் இல்லை. வன்முறைகள் குறைவு, மின்சாரம் தங்குதடையின்றி இருந்து வருகிறது. தண்ணீர் பிரச்சனையும் முன்பு இருந்தது போல் இப்போது இல்லை. மக்கள் நல திட்டங்களும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன என்பதால் மக்களூக்கு அதிமுக மீதுபெரிய அதிருப்தி ஒன்றும் இல்லை. அதே நேரம் ஆட்டமாற்றம் இருந்தால் நல்லா இருக்குமோ என்ற விருப்பம் இருந்தாலும், திமுக வந்துவிட்டால் ரவுடியிசம் அதிகமாகிவிடும் என்கிற அச்சமும் இருக்கத்தான் செய்கிறது.

2016ல் நடந்ததுபோல்… திமுகவுக்கு பதற்றத்தை ஏற்படுத்தும் அதிமுகவின் உற்சாகம்

குறிப்பாக, திமுக ஆட்சிக்கு வந்துவிட்டால் என்ன செய்வது என்று திரையுலகின் இப்போதே மிரளத்தொடங்கிவிட்டனர். திமுகவால்தான் என் வாழ்க்கையே போய்விட்டது என்று பல தயாரிப்பாளர்கள் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். திமுக வந்துவிட்டால் சன் குழுமத்தின் முகம்மாறிவிடும். மொத்த சினிமாவும் அவர்கள் வசம் போய்விடும். பழைய நிலைமை திரும்பினால் அவர்கள் வைத்ததுதான் சட்டம் என்றாகிவிடும் என்று திரையுலகம்தான் அதிகம் கவலைப்படுகிறது.

2016ல் நடந்ததுபோல்… திமுகவுக்கு பதற்றத்தை ஏற்படுத்தும் அதிமுகவின் உற்சாகம்

அரசு ஊழியர்கள் மட்டுமே குறிப்பாக போக்குவரத்து தொழிலாளர்கள், ஆசிரியர்கள் மட்டுமே திமுகவின் ஆட்சியை எதிர்பார்க்கிறார்கள். அதனால்தான் கருத்துக்கணிப்புகளை எல்லாம் கவனிக்காமல் அதிமுக தேர்தல் களத்தில் உற்சாகமாக விளையாடிக்கொண்டிருக்கிறது.

ஆனால், கருத்துக்கணிப்புகளை எல்லாம் மனதில் வைத்துக்கொண்டு வெற்றி மிதப்பில் இருந்த திமுகவுக்கு உதறலை கொடுத்திருக்கிறது அதிமுகவின் உற்சாகம்.

2016ல் நடந்ததுபோல்… திமுகவுக்கு பதற்றத்தை ஏற்படுத்தும் அதிமுகவின் உற்சாகம்

கோடி கோடியாக செலவழிப்பார்கள் என்று நினைத்துதான் நிறைய சேர்த்து வைத்திருக்கும் பழைய முகங்களுக்கே வாய்ப்பு கொடுத்திருக்கிறார் ஸ்டாலின். ஆனால், கருத்துக்கணிப்புகளை நம்பித்தான் அவர்களும் பாக்கெட்டில் இருந்துகூட பணத்தை எடுக்காமல் இருந்துவிட்டார்கள். ஆனால், போகப்போக கள நிலவரத்தை பார்த்துவிட்டு, கருத்துக்கணிப்புக்கும் கள நிலவரத்திற்கும் சம்பந்தம் இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறதே.. இதை நம்பி பணத்தை பூட்டிவைத்துவிட்டோமே என்று புலம்ப ஆரம்பித்துவிட்டார்கள்.

2016ல் நடந்ததுபோல்… திமுகவுக்கு பதற்றத்தை ஏற்படுத்தும் அதிமுகவின் உற்சாகம்

2016ல் நடந்தது மீண்டும் நடந்துவிடுமோ என்கிற சந்தேகமும் வந்து திமுக வேட்பாளர்களை கவலை கொள்ள செய்திருக்கிறது. ஓவர் டோஸ் உடம்புக்கு ஆகாது என்று சொல்வதைப்போலவே, திமுகதான்..திமுகதான்.. என்று பத்திரிகைகளும், ஊடகங்களும் ஊதித்தள்ளின. ஓவராக ஊத ஊத கடையில் வெடித்தே விட்டது. 2016 தேர்தலில் திமுகவால் பறக்க முடியாமல் போய்விட்டது. அந்த நிலைமை 2021 தேர்தலிலும் நடந்துவிடுமோ என்ற அச்சமும் அவர்களை ஆட்டிப்படைக்கிறது.

2016ல் நடந்ததுபோல்… திமுகவுக்கு பதற்றத்தை ஏற்படுத்தும் அதிமுகவின் உற்சாகம்

நிலைமை இப்படியே போனால் மீண்டும் எதிர்கட்சியாகத்தான் பேரவையில் அமரவேண்டும் போலிருக்கிறது என்பதை உணர்ந்து, அதற்கு எதற்கு பணத்தை வாரி இறைக்க வேண்டும். ஏற்கனவே 10 வருசம் போச்சு. இதில் இன்னும் 5 வருசத்த ஓட்டணும். இருக்குறத இறக்கி விட்டுட்டா எப்படி எடுக்கிறது? என்கிற கவலையும் இருப்பதால், கடைசி நேரத்தில் வாரி இறைத்தால் வந்துவிடலாம் என்கிற நம்பிக்கையும் இருப்பதால் கையை பிசைந்து நிற்கிறார்கள் என்று தகவல்.

2016ல் நடந்ததுபோல்… திமுகவுக்கு பதற்றத்தை ஏற்படுத்தும் அதிமுகவின் உற்சாகம்

தலைமை கொடுத்தால் எதையும் பதுக்காமல் அப்படியே கொடுத்துவிடலாம். அதை வேண்டுமானால் செய்யலாம் என்று நினைக்கிறார்களாம். கோடி கோடியா செலவு செய்வேன் என்று சொல்லிவிட்டு இப்போது தலைமையை எதிர்பார்த்தால் என்ன நியாயம் என்று கடுப்பாகியிருக்கிறதாம் அறிவாலயம்.