2016- இல் நடைபெற்ற விஏஓ தேர்விலும் முறைக்கேடு! 2 வி.ஏ.ஓக்கள் கைது!! 

 

2016- இல் நடைபெற்ற விஏஓ தேர்விலும் முறைக்கேடு! 2 வி.ஏ.ஓக்கள் கைது!! 

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற விஏஓ தேர்வில் முறைகேடு செய்து வெற்றி பெற்றதாக 2 கிராம நிர்வாக அலுவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற விஏஓ தேர்வில் முறைகேடு செய்து வெற்றி பெற்றதாக 2 கிராம நிர்வாக அலுவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சமீபகாலமாக தமிழ்நாடு தேர்வாணையத்தால் நடத்தப்படும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, குரூப் 4 உள்ளிட்ட தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெற்றுவருவது அம்பலமாகிவருகிறது. முறைகேட்டில் தொடர்புடைய இடைதரகர்களும், தேர்வாளர்களும் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 

TNPSC exam

இந்நிலையில்  நெல்லை படலையார்குளம் விஏஓ பன்னீர்செல்வம், திருவள்ளூர் பனையஞ்சேரி விஏஓ செந்தில்ராஜ் ஆகியோர் 2016 ஆம் ஆண்டு இளையான்குடி மையத்தில் நடைபெற்ற விஏஓ தேர்வில் முறைகேடு செய்து, பணியில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சிபிசிஐடி காவல்துறையினர் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். அவர்கள் இருவரும் இடைதரகர் ஜெயக்குமாரிடம் தலா ரூ.7 லட்சம் கொடுத்து முறைகேடு செய்து தேர்வில் தேர்ச்சி செய்திருப்பது சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. 

yttn

கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்து முடிந்த குரூப் 2 தேர்வில் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த முறைகேட்டில் மூளையாகச் செயல்பட்ட ஜெயக்குமார் நேற்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். தற்போது ஜெயக்குமார் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற விஏஓ தேர்விலும் முறைகேடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.