சசிகலாதான் அதிமுகவின் பொதுச்செயலாளரா?சலசலப்பை ஏற்படுத்திய கடிதம்

 

சசிகலாதான் அதிமுகவின் பொதுச்செயலாளரா?சலசலப்பை ஏற்படுத்திய கடிதம்

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து இம்மாதம் 27ம் தேதி விடுதலையாகும் சசிகலா அன்று இரவு ஓசூரில் தங்கிவிட்டு, மறுநாள் 28 தேதி காரில் சென்னைப்புறப்பட்டு வருவதாக தகவல்.

தமிழக – கர்நாடக எல்லையில் சசிகலாவுக்கு வரவேற்பு கொடுக்க அமமுகவினர் ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். மேலும் ஓசூரில் இருந்து சென்னைக்கு புறப்படும்போது அந்த வழியனுப்பு விழாவை தடபுடலாக நடத்த முடிவெடுத்திருக்கிறது அமமுக.

சசிகலாதான் அதிமுகவின் பொதுச்செயலாளரா?சலசலப்பை ஏற்படுத்திய கடிதம்

ஓசூரில் இருந்து ஆம்பூர் வழியாக சென்னை வரும் சசிகலாவுக்கு பேனர், கட்ட அவுட் வைத்து அசரடிக்கவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

பேனர், கட் அவுட் வைப்பதற்கு அனுமதி கேட்க ஆம்பூர் வட்டாட்சியரிடன் அனுமதி கோரி எழுதப்பட்டிருக்கும் கடிதம்தான் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சசிகலாதான் அதிமுகவின் பொதுச்செயலாளரா?சலசலப்பை ஏற்படுத்திய கடிதம்


அந்த அனுமதி கோரும் கடிதத்தில், அனைத்திந்திய அண்ணா தி.மு.கழகத்தின் பொதுச்செயலாளர் சசிகலா, பெங்களூரில் இருந்து ஆம்பூர் வழியாக சென்னை செல்ல உள்ளதால் பிளக்ஸ் போர்டு வைக்க அனுமதி கோருகிறோம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பாலசுப்பிரமணி தலைமையில் சசிகலாவுக்கு வழியனுப்பு நடத்தப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில், ‘அனைத்திந்திய அண்ணா தி.மு.கழகத்தின் பொதுச்செயலாளர் சசிகலா’ என்று இருப்பதால் அதிமுகவில் சலசலப்பினை ஏற்படுத்தி இருக்கிறது.