புதிய பாராளுமன்ற கட்டுமானப்பணிகள் நாளை தொடங்குவது ஏன்?

புதிய பாராளுமன்ற கட்டுமானப்பணிகள் நாளை தொடங்குவது ஏன்?

புதிய பாராளுமன்றத்தின் கட்டுமானப்பணிகள் டெல்லியில் நாளை தொடங்குகின்றன.

94 ஆண்டுகளுக்கு முன்னர் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட கட்டிடம்தான் தற்போதைய பாராளுமன்றம். இடபற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களினால் இந்த பாராளுமன்றத்திற்கு அருகேலேயே 971 கோடி செலவில் புதிய பாராளுமன்றம் அமைப்பது என்று மத்திய அரசு முடிவெடுத்தது. அதன்படி அடிக்கல்லும் நாட்டினார் பிரதமர் நரேந்திரமோடி.

புதிய பாராளுமன்ற கட்டுமானப்பணிகள் நாளை தொடங்குவது ஏன்?

நாடு தற்போது இருக்கும் சூழ்நிலையில் இத்தனை கோடி செலவில் புதிய பாரளுமன்றம் தேவையா என்ற கடும் விமர்சனம் எழுந்தது. ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் புதிய பாராளுமன்ற பணிகளில் மும்முரமாக இருக்கிறது மத்திய அரசு.

புதிய பாராளுமன்ற கட்டுமானப்பணிகள் நாளை தொடங்குவது ஏன்?

வடமாநிலங்களில் தை பிறப்பினை மகர சங்கராந்தி என கொண்டாடி வருகிறார்கள். அதனால் நல்ல காரியக்களை தொடங்க உகந்த நாள் என்பதால் கட்டுமான பணிகளை நாளை தொடங்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது.