ராமர் பாலர் உருவானது எப்படி? உண்மையான வயது என்ன?

 

ராமர் பாலர் உருவானது எப்படி? உண்மையான வயது என்ன?

ராமேஸ்வரம் அடுத்த பாம்பனில் இருந்து இலங்கை தலைமன்னார்வரையிலும் சுமார் 48 கிலோ மீட்டர் தூரத்திற்கு கடலுக்கு அடியில் பாலம் அமைந்திருக்கிறது. இது ராமர் கட்டிய பாலம் என்று ராமயணத்தில் இருக்கிறது. அமெரிக்க விஞ்ஞானிகளும் இது மனிதர்களால் கட்டப்பட்ட பாலம்தான் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

ராமர் பாலர் உருவானது எப்படி? உண்மையான வயது என்ன?

சீதாவை மீட்பதற்காக வானர படைகளை கொண்டு ராமர் இந்த பாலத்தை கட்டியதாக புராணங்கள் கூறுகையில், ராமர் பாலம் இயற்கையாக அமைந்தது என்று ஒரு தரப்பினர் சொல்லி வருகின்றர்.

ராமர் கட்டியது என்பது கட்டுக்கதை. ராமன் எந்த பொறியியல் கல்லூரியில் படித்து பாலத்தை கட்டினான் என்று மறைந்த திமுக தலைவர் கருணாநிதி கமெண்ட் அடித்து சலசலப்பை ஏற்படுத்தினார்.

இந்த பாலத்தின் வயது 7 ஆயிரம் ஆண்டுகளை தாண்டியது என்று கூறப்பட்டு வரும் நிலையில், உண்மையான வயதை அறியவும், இந்த பாலம் இயற்கையாக உருவானதா? இல்லை உண்மையிலேயே உருவாக்கப் பட்டதா? என்பது குறித்து ஆராய்ச்சிகு ஏ.எஸ்.ஐ. எனும் இந்திய தொல்லியல் ஆய்வு மையம் அனுமதி வழங்கி இருக்கிறது.

ராமர் பாலர் உருவானது எப்படி? உண்மையான வயது என்ன?

கோவாவின் சி.எஸ்.ஐ.ஆர். – தேசிய கடல் சார் ஆய்வு நிறுவனம் இந்த ஆய்வு திட்டத்தினை உருவாக்கி இருக்கிறது. தேசிய இவ்வாண்டிலேயே அந்த ஆராய்ச்சி தொடங்கப்பட இருக்கிறது.

இதுகுறித்து தேசிய கடல்சார் ஆய்வு நிறுவனத்தின் இயக்குரும் பேராசிரியருமான சுனில்குமார், தொல்பொருட்கள், ரேடியோ மெட்ரிக், தெர்மோலுமினென்சென்ஸ் மூலம் புவியியல் கால அளவுகோல், துணை சுற்றுச்சூழல் தரவுகளின் அடிப்படையில் இவ்வாய்வுகள் நடைபெற இருக்கின்றன என்கிறார்.

ரேடியோ மெட்ரிக் தொழில்நுட்பத்தின் மூலமாக பாலத்தின் வயதை தீர்மானிக்க முடியும் என்று நம்பப்படுகிறது.