2013 என்பதற்கு பதிலாக 1913 என துணை முதல்வர் உரை ! சமுதாய வளைகாப்பு விழாவில் பங்கற்றேவர்கள் அதிர்ச்சி

2013 என்பதற்கு பதிலாக 1913 என துணை முதல்வர் உரை ! சமுதாய வளைகாப்பு விழாவில் பங்கற்றேவர்கள் அதிர்ச்சி

பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா 1913ம் ஆண்டு ஜெயலலிதாவால் தொடங்கப்பட்டது என துணை முதலமைச்சர் கூறியதை கேட்டு அரங்கமே அதிர்ச்சிக்குள்ளானது.

தேனி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டத்தின்கீழ், 1,360 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி திருமண மண்டபம் ஒன்றில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், அ.தி.மு.க நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்து கர்ப்பிணிகள் மண்டபத்துக்கு அழைத்துவரப்பட்டனர்.

o panneerselvam

அதிகப்படியான பெண்கள் வந்ததால் மண்டபத்தில் போதிய இடமின்றி வெளியே சாமியானா பந்தல் போட்டு அமர வைக்கப்பட்டனர். காலை 9 மணிக்கே அனைவரும் வந்து விட்ட நிலையில் 10.30 மணிக்குதான் துணை முதல்வர் ஓ.பி.எஸ். அவர்கள் நிகழ்ச்சிக்கு வந்தார். இதனால் கர்ப்பிணி பெண்கள், இயற்கை உபாதைகளைக் கழிக்க மண்டபத்தில் இருந்த ஒரே ஒரு கழிவறைக்குச் சென்று நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை உருவானதாக கூறப்படுகிறது. நிகழ்ச்சிக்கு வந்த கர்ப்பிணிகளின் உறவினர்கள் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் வருவார்கள் என தெரிந்தும் போதிய அடிப்படை வசதி செய்து தரவில்லை என குற்றம்சாட்டினர்.
இதையடுத்து கர்பபிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தி வைக்கப்பட்டது. பின்னர் விழாவில் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தற்போது நடைபெறக்கூடிய சமுதாய வளைகாப்பு விழா, 1913ம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்டு தற்போது வரை சிறப்பாக நடைபெற்றுவருவதாக குறிப்பிட்டார். இதை கேட்ட அரங்கத்தில் இருந்த அதிமுகவினர், அரசு அதிகாரிகள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

pannerselvam

ஏழை காப்பிணிப் பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா திட்டத்தை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் வாயிலாக 2013ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால் தொடஙககி வைக்கப்பட்டது. கர்ப்பிணிகளுக்கான உதவி தொகையும் ரூ.18 ஆயிரமாக உயர்த்தி ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்கள். தாய் வீட்டு சீதனமான வளைகாப்பு விழாவில் கர்ப்பிணிகளுக்கு மாலை, சந்தனம், குங்குமம், வளையல் ஆகிய பொருட்கள் அடங்கிய சீர்வரிசை தாம்பூலம் வழங்கப்படுகிறது. மேலும் பொங்கல்சாதம், புளிசாதம், லெமன்சாதம், சாம்பார்சாதம், தயிர்சாதம், ஆகிய ஐந்து வகை சாதங்கள் வழங்கப்படுவத வழக்கம். இதுமட்டுமின்றி கருவுற்று இருக்கும்பொழுது பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு கையேடும் வழங்கப்பட்டு வருகிறது.