ரஜினி யாருக்கு வாக்களித்தார்? மீண்டும் நடக்கவிருந்த 2011 சம்பவம்- தப்பித்த சூப்பர்ஸ்டார்!

 

ரஜினி யாருக்கு வாக்களித்தார்? மீண்டும் நடக்கவிருந்த 2011 சம்பவம்- தப்பித்த சூப்பர்ஸ்டார்!

வெய்யிலின் காரணமாக இந்த முறை பிரபலங்கள் பலரும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியவுடனேயே தங்களது வாக்கினை பதிவு செய்தனர். திருவான்மியூர் வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவுக்கு 20 நிமிடங்களூக்கு முன்னரே தனது மனைவி ஷாலினியுடன் வந்து காத்திருந்த நடிகர் அஜித் முதல் ஆளாக தனது வாக்கினை பதிவு செய்தார். கடந்த தேர்தலில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் இந்த முறை அவர் காலையிலேயே வந்திருந்தார். அப்படி இருந்தும் மீடியாக்காரர்களாலும், ரசிகர்களாலும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

ரஜினி யாருக்கு வாக்களித்தார்? மீண்டும் நடக்கவிருந்த 2011 சம்பவம்- தப்பித்த சூப்பர்ஸ்டார்!

நடிகர் ரஜினிகாந்தும் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி வாக்குச்சாவடிக்கு வந்து காலை 7.10க்குள் தனது வாக்கினை பதிவு செய்துவிட்டு சென்றுவிட்டார். ரஜினி வந்தபோது வழக்கத்தை விடவும் கூட்டம் முட்டித்தள்ளியது. வாக்களிக்க அவர் சென்று நின்றபோது, மீடியாக்களின் நெரிசலை போலீசாரால் சமாளிக்க முடியவில்லை. ரஜினியை மீடியாக்காரர்கள் சுற்றி வளைத்துவிட்டனர். இதனால், எப்படி வாக்களிப்பது என்று செய்வதறியாது திகைத்து நின்றார் ரஜினி.

வாக்களிப்பது என்பது ரகசியமானது. அதை படம்பிடிக்க கூடாது என்று தெரிந்திருந்தும், ரஜினியை 2011ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் சிக்க வைத்தது மாதிரி சிக்க வைக்க நினைத்து, ரஜினி ஓட்டு மெசின் முன்பாக நின்றதும், அவரது தலைக்கு மேலே கேமராக்களை வைத்துக்கொண்டனர்.

ரஜினி யாருக்கு வாக்களித்தார்? மீண்டும் நடக்கவிருந்த 2011 சம்பவம்- தப்பித்த சூப்பர்ஸ்டார்!

ஒருமுறை பட்டது போதாதா? ஒரு தழும்பு இன்னொரு தழும்புக்கு வழி வகுக்குமா என்ன? 2011ல் அனுபவித்ததை போல் மீண்டும் அனுபவிக்க ரஜினிக்கு விருப்பமில்லை. அன்றைக்கு செய்ததை போலவே இன்றைக்கும் செய்ய நினைக்கிறார்கள் என்பதை புரிந்துகொண்ட ரஜினி, இந்த முறை உறுதியாக நின்றுவிட்டார். மீடியாக்காரர்கள் தள்ளிச்சென்றால்தான் வாக்களிக்க முடியும் என்று சொன்னதால், போலீசார் ஓடிவந்து மீடியாக்காரர்களை விலக்கி விட, தன் தலைக்கு மேலே எந்த கேமராவும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்ட பின்னர் வாக்களித்தார் ரஜினி.

வாக்களித்துவிட்டு மின்னல் வேகத்தில் சென்று காரில் ஏறி புறப்பட்டுவிட்டார். பேட்டி கொடுத்தால், எந்த கட்சிக்கு ஓட்டு போட்டீர்கள் என்று கேட்டு, மறுபடியும் வில்லங்கத்தில் சிக்க வைத்து விடுவார்கள் என்று நினைத்துதான் மின்னல் வேகத்தில் பறந்துவிட்டார்.

ரஜினி யாருக்கு வாக்களித்தார்? மீண்டும் நடக்கவிருந்த 2011 சம்பவம்- தப்பித்த சூப்பர்ஸ்டார்!

2011ல் என்ன நடந்தது? ரஜினி சந்தித்த சங்கடம் என்ன?

2011 சட்டமன்ற தேர்தலில் ரஜினிகாந்த் யாருக்கு வாக்களித்தார் என்பது அம்பலமானது. அவர் அதிமுகவுக்குத்தான் வாக்களித்தார் என்பதை மீடியாக்காரர்கள் வீடியோ எடுத்து வெளியிட்டு விட்டனர்.

அந்த தேர்தலில் எப்போதும் போலவே ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் ரஜினி வாக்களிக்க வந்தபோது, வழக்கத்தை விடவும் கூட்டம் முட்டித்தள்ளியது. ரசிகர்களை விடவும் மீடியாக்காரர்கள் அதிகம். அதனால் ரஜினியாலும் சமாளிக்க முடியவில்லை. ஓட்டுப்போடுவதில் ரகசியம் காக்க வேண்டும் என்று ரஜினியும் எவ்வளவோ முயற்சித்தார். அது முடியவில்லை. சுற்றியிலும் மீடியாக்காரர்கள் சூழ்ந்துகொண்டனர். தலைக்கு மேல் பல கேமராக்கள். வேறு வழியின்றி ரஜினி ஓட்டுப்போட்டுவிட்டார். அவர் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

ரஜினி யாருக்கு வாக்களித்தார்? மீண்டும் நடக்கவிருந்த 2011 சம்பவம்- தப்பித்த சூப்பர்ஸ்டார்!

கருணாநிதிக்கு வந்த கோபம்:

கருணாநிதி அன்றைக்கு முதல்வர். ரஜினி அதிமுகவுக்கு ஓட்டுப்போட்டார் என்ற தகவல் தீயாய் பரவ, கோபத்தில் இருந்த கருணாநிதியை மேலும் கோபப்படுத்தியது ரஜினியின் பேட்டி. அதிமுகவுக்கு ஓட்டு போட்டுவிட்டு சென்ற ரஜினியிடம் இருந்து மேலும் அவர் வாயை கிளறி ஏதாவது பரபரப்பாக்கலாம் என்று போயஸ்கார்டனில் ஆங்கில சேனல்களின் செய்தியாளர்கள் அவரை மடக்கிவிட்டனர். செய்தியாளர்களின் உள்நோக்கத்தை புரிந்துகொள்ளாத ரஜினியும் உணர்ச்சிவசப்பட்டு, ’’ஊழல், விலைவாசி, விவசாயிகள் நலன், அடுத்த முதல்வர்’’ என்றெல்லாம் பேசிவிட்டார்.

இது இன்னும் பெரிதாகி கருணாநிதியை கோபப்படுத்திவிட்டது.

2004ல் பாமக மீது இருந்த கோபத்தில், ‘’அதிமுக – பாஜக கூட்டணிக்கு வாக்களித்தேன்’’என்று வெளிப்படையாக கூறி சர்ச்சையை ஏற்படுத்தியவர் ரஜினி. ஆனால், 2011 தேர்தலிலும் ரஜினி தான் யாருக்கு வாக்களித்தேன் என்பது தெரியவேண்டும் என்பதற்காகத்தான், மீடியாக்காரர்களை விலக்கி விடாமல் ஓட்டுபோட்டதாகவும் பேச்சு எழுந்தது.

ரஜினி யாருக்கு வாக்களித்தார்? மீண்டும் நடக்கவிருந்த 2011 சம்பவம்- தப்பித்த சூப்பர்ஸ்டார்!

அவர் கேட்ட கேள்வி: புழுவாக நெளிந்த ரஜினி:

இந்த வாக்குப்பதிவு அன்று மாலை கருணாநிதியுடன் அமர்ந்து, ‘பொன்னர் -சங்கர்’ திரைப்படம் பார்ப்பதாக ஏற்பாடு. முன்கூட்டியே திட்டமிடப்பட்டிருந்ததால் ரஜினியால் தவிர்க்க முடியவில்லை. விவகாரம் அதற்குள் பெரிதாகிவிட்டதால் கருணாநிதியை எப்படி நேருக்கு நேர் சந்திப்பது என்று தர்மசங்கடத்தில் சென்றார். என்றைக்கும் போல் இல்லாமல், ஒரு அயர்ன் செய்யாத வேட்டியும், ஒரு அயர்ன் செய்யாத தொள தொள சட்டையும் போட்டுக்கொண்டு, அந்த கோலத்தில் எல்லோருக்கும் ரஜினியை பார்க்கவே சங்கடமாக இருந்தது.

ரஜினி எப்படியும் இந்த நிகழ்வுக்கு வரமாட்டார் என்று மீடியாக்கள் பேசி வந்த நிலையில் ரஜினியும் வந்துவிட்டதால் ரொம்பவே பரபரப்பாக இருந்தது. கருணாநிதி விழாக்களில் கம்பீரமாக இருக்கும் ரஜினிகாந்த், இந்த முறை கூனிக்குருகி நின்றுகொண்டிருந்தார்.

கருணாநிதி எப்படியும் நேருக்கு நேர் இந்த விவகாரத்தை பேசமாட்டார் என்றே நினைத்த ரஜினி, தர்மசங்கடத்தில் தள்ளி தள்ளி போனபோது, கருணாநிதி அருகில் அழைத்தார். தயங்கித்தயங்கியே ரஜினி சென்றார்.

ரஜினி யாருக்கு வாக்களித்தார்? மீண்டும் நடக்கவிருந்த 2011 சம்பவம்- தப்பித்த சூப்பர்ஸ்டார்!

அப்போது கவிஞர் வைரமுத்துவை அழைத்த கருணாநிதி, ’’நீங்களெல்லாம் இந்த மனிதருக்கு (ரஜினிக்கு) எந்த அளவு பரிந்து பேசியிருக்கிறீர்கள். ஆனால், இவர் செய்திருக்கிற வேலையைப் பார்த்தீர்களா? இவரது நம்பகத்தன்மை தெரிகிறதா?’’என்றபோது, ரஜினி புழுவாய் நெளிந்தார்.

பின்னர் கருணாநிதி, ’’வாக்களிப்பது அவர் இஷ்டம். ஆனால் அதைப் படம்பிடிக்கவும் அனுமதித்திருக்கிறார்கள். அடுத்து அவர் அளித்த பேட்டியைப்பாருங்கள். விலைவாசி நாடெங்கும் உள்ள பிரச்சினை. ஆனால் நமது அரசு அதைத் தீர்க்க எடுத்த முயற்சிகள் தெரியாதா? விவசாயிகளுக்கு இந்த அரசை விட அதிகம் செய்தது யார்? இதெல்லாம் சரிதானா?’’ என்று முதல்வர் கருணாநிதி கேட்க, இருக்கையில் உட்கார முடியாமல் நெளிந்துகொண்டிருந்தார் ரஜினி.

அவர் எதுவுமே பேசவில்லை. படம் எப்படா முடியும் என்று காத்திருந்த ரஜினி, படம் முடிந்த கையோடு, காரில் ஏறிப் பறந்துவிட்டார்.

அவர் போன பின்னர் கருணாநிதி, ரஜினியின் இந்த திடீர் மாற்றத்துக்கு காரணம், அந்த பத்திரிக்கை ஆசிரியரான அரசியல் தரகர் கம் விமர்சகர்தான் என்று சொல்லி சிரித்திருக்கிறார்.

ரஜினி யாருக்கு வாக்களித்தார்? மீண்டும் நடக்கவிருந்த 2011 சம்பவம்- தப்பித்த சூப்பர்ஸ்டார்!

தப்பித்த ரஜினி:

பாமக மீது இருந்த கோபத்தில் அதிமுகவுக்கத்தான் வாக்களித்தே என்று சொன்ன ரஜினி, 2011ல் ஆட்சி மாற்றம் வேண்டும் என்பதற்காக அதிமுகவுக்கு ஓட்டு போட்ட ரஜினி, இந்த தேர்தலிலும் அதிமுக – பாஜக கூட்டணிக்குத்தான் வாக்களித்தாரா என்பது தெரியவில்லை. அதை அவர் சொல்லவும் விரும்பவில்லை. மீடியாக்காரர்களிடம் எச்சரிக்கையாக இருந்து தப்பித்துவிட்டார்.

  • கதிரவன்