இரட்டை குழல் துப்பாக்கி போல சாதிக்கும் ஈபிஎஸ்-ஓபிஎஸ்!

 

இரட்டை குழல் துப்பாக்கி போல சாதிக்கும் ஈபிஎஸ்-ஓபிஎஸ்!

இரண்டு குழல்கள் இருந்தாலும் ஒரே இலக்கு என்பதுதான் இரட்டை குழல் துப்பாக்கியின் துல்லியம். இந்த வார்த்தையை பலரும் சும்மா சொலவடைக்கும் சொல்வார்கள். ஆனால் இதை நடைமுறையில் சாதித்து காட்டி வருகின்றனர் அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளரும்- இணை ஒருங்கிணைப்பாளரும் என அதிமுக தொண்டர்கள் பெருமையோடு கூறுகின்றனர். இது தொடர்பாக அதிமுக நிர்வாகிகள் சிலருடன் பேசியபோது, அதிமுக எனும் கட்சிக்கு பிள்ளையார் சுழி போட்ட பெருமை எம்ஜிஆருக்கே உண்டு. அவரைத் தொடர்ந்தும் கட்சியை தமிழக அரசியலில் இருந்து அசைக்க முடியாத இடத்துக்கு நகர்த்தியவர் மறைந்த முதல்வர் அம்மா. ஜெயலலிதா என்கிற மாபெரும் ஆளுமையின் மறைவுக்கு பின்னரும் அதிமுக கட்சி அதே கட்டுக்கோப்புடன் இருக்குமா என்கிற குழப்பம் எல்லோருக்கும் இருந்தது.

இரட்டை குழல் துப்பாக்கி போல சாதிக்கும் ஈபிஎஸ்-ஓபிஎஸ்!

ஆனால், கடந்த 4 ஆண்டுகளாக கட்சி தலைநிமிர்ந்து நிற்பதைக் கண்டு, இந்திய அரசியல்வாதிகள் பலரும் ஆச்சர்யம் அடைகின்றனர். அந்த ஆச்சர்யத்துக்கு சொந்தக்காரர்கள்…’இரட்டைக்குழல் துப்பாக்கி’ என வர்ணிக்கப்படும் இபிஎஸ், ஓபிஎஸ்தான் என நெகிழ்ச்சியுடன் கூறுகின்றனர். அம்மா மறைவுக்கு கதறிய தொண்டர்களுக்கு, கட்சியை காப்பாற்ற வேண்டுமே என்கிற கவலையும் இருந்தது. அதேபோல, அதிமுக பிளவுபட்டபோது கண்ணீர் வடிக்காத தொண்டர்கள் வெகு சொற்பமே. ஆனால், பல அரசியல் மாற்றங்களுக்கு மத்தியில் எடப்பாடியும், பன்னீரும் மீண்டும் கரம்கோர்த்தனர்.

அதையடுத்து தொண்டர்களுக்குக் கொஞ்சம் நம்பிக்கை பிறந்தது. ஆயினும் இந்த நம்பிக்கையை சீர்குலைக்க வதந்திகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. ‘ எடப்பாடிக்கும், பன்னீருக்கும் இடையே மீண்டும் விரிசல், எந்நேரமும் மோதல் வெடிக்கும், கட்சி மறுபடியும் பிளவுபடும்’’ என்கிற கட்டுக் கதைகள் நாலாபுறத்திலும் வலம் வந்தன. இந்த சமயத்தில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார்? என்கிற சர்ச்சையும் சேர்ந்துகொள்ள, தொண்டர்கள் ரொம்பவே குழப்பமடைந்தனர். எனினும் கட்சியின் மூத்த நிர்வாகிகளின் தொடர் முயற்சிகளாலும், இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோரது பரந்த மனங்களாலும் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. முதல்வர் வேட்பாளராக எடப்பாடியை பன்னீரே அறிவித்தார். ஆனாலும் இதன் பிறகும் வதந்திகள் ஒயவில்லை. சிறைமீளும் சசிகலாவுடன் பன்னீர் அணிசேர இருப்பதாக பற்றவைக்கப்பட்டன. இதற்கு அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பன்னீரே தகுந்த பதிலளித்தார்.

இரட்டை குழல் துப்பாக்கி போல சாதிக்கும் ஈபிஎஸ்-ஓபிஎஸ்!

மொத்தத்தில் மருது சகோதரர்கள் போல இபிஎஸ்-சும், ஓபிஎஸ்-சும் இணைந்து செயல்பட்டு வருவது, அதிமுகவினரை பன்மடங்கு உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதிமுகவின் அரசியல் வாழ்வு முடிந்தது என்று நினைத்திருந்தவர்களுக்கு, காலம் அடையாளம் காட்டிய இபிஎஸ், ஓபிஎஸ் ஆகிய இரு தலைவர்களால் இன்றைக்கு தலைநிமிர்ந்து நிற்கிறோம்.

அதிமுகவை உடைக்க நடந்த சதிச் செயல்கள், ஆதிக்கம் செலுத்த நினைத்த கட்சிகளின் வியூகங்கள் அனைத்தையும் இருவரும் தவிடுபொடியாக்கி இருக்கிறார்கள். எந்தவொரு சின்ன விஷயமானாலும் இருவரும் கலந்தும், இணைந்தும் செயல்படுவது எங்களுக்கு புதுத் தெம்பை அளித்துள்ளது. இவர்களை தலைவர்களாக பார்க்கவில்லை. சாதாரண தொண்டர்களில் ஒருவராகவே பார்க்கிறோம். இவர்களின் வழிகாட்டுதலில் கட்சி இன்னும் உச்சம் தொடப்போவது உறுதி’’ என்று கூறினர்.