• February
    25
    Tuesday

Main Area

Main



முட்டை காளான் பீட்சா… பிரியாணிப் பொறியல்… முட்டையில் 201 வகை சமையல்!

Egg varieties
Egg varieties

கோவை வைசியாள் வீதி கடைசியில்,பெந்தே கவுண்டர் மருத்துவமனைக்கு பின்புறம் இருக்கிறது இந்த ஆம்லெட் அமுத சுரபி.விஜயலட்சுமி ஆம்லெட் கடை என்று பெயர்.கடை துவங்கி எட்டு வருடம் ஆகிறது.

கடைக்காரர் மீனாட்சி குமாருக்கு சொந்த ஊர் மதுரை. முன்னாள் நகைக்கடைத் தொழிலாளி.அந்த வேலையில் தட்டுப்பாடு ஏற்பட்டதால் இப்படி ஒரு ஆம்லெட் கடை துவங்கி , முட்டையில் இருந்து 201 வகை பண்டங்களை சேதாரம் இல்லாமல் செதுக்கி எடுத்திருக்கிறார்.

வழக்கமான ஆம்லெட்,ஆஃப்பாயில்,ஃபுல் பாயில் கலக்கி எல்லாம் உண்டு. ஆனால் மீனாட்சி குமாரின்  கற்பனையில் உருவான முட்டை காளான் பீட்சா, குழம்பு ஆம்லெட், முட்டை சில்லி,முட்டை சிந்தாமணி, முட்டை காளான் கலக்கி,காடை முட்டை மசாலா போன்ற வேறெங்கும் கிடைக்காத வெரைட்டிகள்தான் இந்தக் கடையின் ஸ்பெஷலே.

egg-types

201 வகை என்பது சும்மா பெருமைக்கெல்லாம் இல்லை.கடையின் பின்பக்கச் சுவற்றில் அந்த 201 டிஷ்களின் பட்டியலை ஃபிளக்சில் அச்சிட்டு வைத்திருக்கிறார். எதைக் கேட்டாலும் செய்து தருவேன் என்கிறார்.
நான் மஞ்சள் கரு சாப்பிடுவதில்லை என்று சொல்பவரா நீங்கள்?,ஸ்பெஷல் முட்டைப் பொறியல், புதினா முட்டை, மல்லி முட்டை, சில்லி முட்டை, சீரக முட்டை, பூண்டு முட்டை என்று உங்களுக்கும் ஒரு ஐம்பது ரகங்கள் வைத்திருக்கிறார். 

எல்லா மசாலாக்களும் அவருடைய தயாரிப்புகள்தான். மாலை ஆறு மணிக்குத் துவங்கினால் இரவு பத்து மணிவரை வியாபாரம் நடக்கிறது. இளைஞர்கள் கூட்டம் அதிகம் இருக்கிறது. இவர்கள்தான் மீனாட்சி குமாரின் புதுப்புது ஐட்டங்களின் ரசிகர்கள். பூண்டு முட்டை, முட்டை சில்லி, காடை முட்டை மசாலா,பிரியாணி பொறியல், தக்காளி ஆம்லெட் ஆகியவை பரபரப்பாக விற்கின்றன. முட்டை காளான் பீட்சாவுக்கும் தனித்த ரசிகர் கூட்டம் இருக்கிறது. 

கொங்கும் மதுரையும் வெவ்வேறு சுவையை விரும்பும்ஆனால், ஒரு மதுரைக்காரர், இப்படி கொங்கு மக்களை தன் கைமனத்தால் கவர்ந்திருப்பது நிச்சயம் சாதனைதான்.

2018 TopTamilNews. All rights reserved.