200ரூ கொடுக்க தயாராக இருக்கும் சங்கிகளே தேஷ்பக்தர்கள் என அறிக! -கடுமையாக சாடிய திருமுருகன்காந்தி

200ரூ கொடுக்க தயாராக இருக்கும் சங்கிகளே தேஷ்பக்தர்கள் என அறிக! -கடுமையாக சாடிய திருமுருகன்காந்தி

பெட்ரோல், டீசல் விலையேற்றம்தான் நாடு முழுவதும் பரபரப்பான பேச்சாக இருக்கிறது. சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிர்யணப்படி பெட்ரோல் டீசல் விலையினை இந்தியாவில் உயர்த்தி இருக்கிறது எண்ணெய் நிறுவனங்கள். வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளதால், அத்தியவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்திருக்கிறது.

200ரூ கொடுக்க தயாராக இருக்கும் சங்கிகளே தேஷ்பக்தர்கள் என அறிக! -கடுமையாக சாடிய திருமுருகன்காந்தி

மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ.100ஐ தாண்டிவிட்டது. தமிழகத்தில் ரூ.90ஐ தாண்டிவிட்டது. இதனால்,
20 ரூபாய்க்கு விற்ற தக்காளி 50 ரூபாய்க்கு விற்கிறது. இந்த விலையேற்றத்தினால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி இருக்கிறார்கள்.

இதனால் ஆங்காங்கே போராட்டங்களூம், ஆர்ப்பாட்டங்களும் வெடிக்கின்றன. ஆனால், பாஜகவினரோ இந்த விலையேற்றத்தினை நியாயப்படுத்துகின்றனர்.

200ரூ கொடுக்க தயாராக இருக்கும் சங்கிகளே தேஷ்பக்தர்கள் என அறிக! -கடுமையாக சாடிய திருமுருகன்காந்தி

இதுகுறித்து மே-17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன்காந்தி, ‘’டெண்டுல்கர் மட்டும் தான் சதம் அடிப்பாரா, மோடி அரசும் செஞ்சுரியை கடக்கிறது. பாஜகவின் மத்தியபிரதேசத்தில் பெட்ரோல் விலை தற்போது ரூ100. விலை ஏன் உயர்ந்தது என கேட்கிறவர்கள் ‘தேசத்துரோகிகள்’. லிட்டருக்கு 200ரூ கொடுக்க தயாராக இருக்கும் சங்கிகளே தேஷ்பக்தர்கள் என அறிக’’ என்று கடுமையாக சாடியிருக்கிறார்.