டெஸ்லா கார் பிரியர்களுக்கு நல்ல செய்தி – இந்தியாவுக்கு வந்துவிட்டது! 

 

டெஸ்லா கார் பிரியர்களுக்கு நல்ல செய்தி – இந்தியாவுக்கு வந்துவிட்டது! 

மின்சார வாகன தயாரிப்பில் உலகின் முன்னணி நிறுவனமாக உள்ள அமெரிக்காவின் டெஸ்லா, இந்தியாவில் தனது வாகனங்களை விற்பனை செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட இந்த காத்திருப்பு தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

டெஸ்லா நிறுவனம் இந்தியாவுக்கு வருவது உறுதியாக தெரிந்தாலும், அலுவலகத்தை எங்கு அமைக்க உள்ளது என்பதும் கேள்விக்குறியாக இருந்தது. இந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள தகவல்களில் பெங்களூருவில், இந்திய அலுவலகத்தை அமைக்க உள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது
இந்தியாவில் அலுவலகம் அமைப்பதற்காக, இந்திய கம்பெனிகள் பதிவாளரிடம் பதிவு செய்துள்ளது. டெஸ்லா இந்தியா மோட்டார்ஸ் அண்ட் எனர்ஜி என்கிற பெயரில் நிறுவனத்தை பதிவு செய்துள்ளது. பெங்களூரு மத்திய வணிக மாவட்டத்தில் அமைய உள்ளது. நிறுவனத்தை கடந்த 8 ஆம் தேதி பதிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

டெஸ்லா கார் பிரியர்களுக்கு நல்ல செய்தி – இந்தியாவுக்கு வந்துவிட்டது! 


மின்சார வாகனங்களை தயாரிக்க இந்தியா ஊக்குவித்து வரும் நிலையில், டெஸ்லா நிறுவனம் இந்தியாவுக்கு வருவது குறிப்பிடத்தக்கம் மாற்றங்களை ஏற்படுத்தும் என கவனிக்கத்தக்கது. ஏற்கெனவே இந்தியாவில் பல முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்கள் மின்சார வாகன தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன. வாகனம் தயாரிப்பது மட்டுமல்லாமல், அவற்றுக்கான சார்ஜிங் மையங்களை உருவாக்கும் கட்டமைப்பு பணிகளிலும் நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. 

டெஸ்லா கார் பிரியர்களுக்கு நல்ல செய்தி – இந்தியாவுக்கு வந்துவிட்டது! 


கடந்த மாதத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், இந்தியாவில் டெஸ்லா கார்கள் 2021 ஆம் ஆண்டில் விற்பனைக்கு வரும் என கூறியிருந்தார். அவர் குறிப்பிட்டதுபோல, டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது அலுவலகத்தை திறந்துள்ளது.  
மின்சார கார்களுக்கு மாற வேண்டும் என நினைப்பவர்கள், குறிப்பாக டெஸ்லா கார்களுக்கான காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்திதான்.