2006ல் செய்தது போல் 2021ல்…திமுகவுக்கு காங்கிரஸ் வைக்கும் கோரிக்கை

 

2006ல் செய்தது போல் 2021ல்…திமுகவுக்கு காங்கிரஸ் வைக்கும் கோரிக்கை

இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் வரவிருக்கும் நிலையில், திமுக சார்பில் தேர்தல் அறிக்கை பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் கூட்டணி கட்சியான தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் கலைப்பிரிவு சார்பில் திமுக சட்டமன்ற தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவுக்கு ஒரு கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது.

2006ல் செய்தது போல் 2021ல்…திமுகவுக்கு காங்கிரஸ் வைக்கும் கோரிக்கை

அக்கடிதத்தில், 2006 சட்டமன்ற தேர்தலின் போது திமுக தேர்தல் அறிக்கையில், நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு சிலை அமைக்கப்படும் வாக்குறுதி அளித்து, அதே மாதிரியே ஆட்சி அமைந்ததும் கடற்கரை சாலையில் சிவாஜி கணேசனுக்கு சிலை அமைத்தார் கலைஞர். ஆனால், பல காரணங்களூக்காக அந்த சிலை அங்கிருந்து அகற்றப்பட்டது.

2006ல் செய்தது போல் 2021ல்…திமுகவுக்கு காங்கிரஸ் வைக்கும் கோரிக்கை

வரும் 2021 தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தவுடன் அகற்றப்பட்ட இடத்திலேயே சிவாஜிகணேசன் சிலையை வைக்க வேண்டும். அதை இந்த தேர்தல் இந்த அறிக்கையிலும் இடம்பெற செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

அகற்றப்பட்ட கண்ணகி சிலையை மீண்டும் அதே இடத்தில் நிறுவப்பட்டதுபோல சிவாகணேசன் சிலையினையும் மீண்டும் காமராஜர் சாலையின் நடுவில் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.