திமுகவுடன் மல்லுக்கட்டுக்காக சென்னை வரும் ராகுல்

 

திமுகவுடன் மல்லுக்கட்டுக்காக சென்னை வரும் ராகுல்

அரசு விழா, துக்ளக் விழா என்று சொல்லி பாஜக பிரமுகர்கள் டெல்லியில் இருந்து வந்தாலும் கூட்டணி தொடர்பான வேலைகளை கவனிக்கவே வருகிறார்கள் என்ற பேச்சு இருப்பது மாதிரிதான் மதுரையில் நடக்கும் ஜல்லிக்கட்டுவை பார்க்க வருகின்ற ராகுல்காந்தியின் வருகையும் கவனிக்கப்படுகிறது.

திமுகவுடன் மல்லுக்கட்டுக்காக சென்னை வரும் ராகுல்

அதிக தொகுதிகளை காங்கிரஸ் எதிர்ப்பார்த்து வரும் நிலையில், 15 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க ஸ்டாலின் முடிவெடுத்திருப்பதாக தகவல். 2011 தேர்தலில் 63 இடங்களில் போட்டியிட்டு வெறும் 5 இடங்களில் மட்டுமே வென்றது. 2016ல் 43 இடங்களில் போட்டியிட்டு 8 தொகுதிகளில் மட்டுமே வென்றதால், மீண்டும் காங்கிரசுக்கு அதிக இடங்களை கொடுத்து வீணடிக்க வேண்டாமென்று முடிவெடுத்திருக்கிறாராம் ஸ்டாலின்.

திமுகவுடன் மல்லுக்கட்டுக்காக சென்னை வரும் ராகுல்

40க்கு மேல் எதிர்பார்த்திருக்கும் காங்கிரஸ், வெறும் 15 சீட்டை மட்டுமே திமுக தங்களுக்கு ஒதுக்க நினைப்பதை அறிந்துதான், ராகுல்காந்தி மூலமாக ஸ்டாலினுக்கு அழுத்தம் கொடுக்க முடிவெடுத்திருக்கிறது.

ஆக, ஜல்லிக்கட்டுக்காக வரவில்லை ராகுல்காந்தி. திமுகவுடனான தொகுதி மல்லுக்கட்டுக்காகவே வருகிறார் என்று தெரிகிறது.