சன் டிவி மைக்கை தூக்கி வீசிய அமைச்சர் விஜயபாஸ்கர்

 

சன் டிவி மைக்கை தூக்கி வீசிய அமைச்சர் விஜயபாஸ்கர்

சன் டிவி மைக்கை பார்த்தும் ஆத்திரத்தில் தூக்கி வீசி பத்திரிகையாளர்களை அதிரவைத்தார் அமைச்சர் விஜயபாஸ்கர்.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தனது விராலிமலை தொகுதியில் தனது சொந்த செலவில் ஒவ்வொரு ஆண்டும் மக்களுக்கு பொங்கல் சீர் வழங்கி வருகிறார். கடந்த ஆண்டு ‘லட்சுமி விளக்கு’ வழங்கியவர், வெணகல பொங்கல்பானை வழங்கி இருக்கிறார்.

சன் டிவி மைக்கை தூக்கி வீசிய அமைச்சர் விஜயபாஸ்கர்

விராலிமலை தொகுதியில் உள்ள ஒரு லட்சம் குடும்பங்களுக்கு ‘நம்ம விஜயபாஸ்கர் வீட்டு சீர்’ வழங்கப்பட்டு வருகிறது. இந்தபொங்கல் சீர் என்பது வெண்கலப் பொங்கல் பானை, பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, கரும்பு உள்ளிட்டவை ஆகும்.

‘நம்ம விஜயபாஸ்கர் வீட்டு சீர்’ என்று அச்சிடப்பட்ட பையில் இந்த சீர் வழங்கப்பட்டு வருகிறது.

தேர்தலை கருத்தில்கொண்டு பொங்கல் பானை வழங்குகிறார் என்று ஒருபக்கம் குற்றச்சாட்டு எழுந்திருக்கும் நிலையில், மாவட்டத்தில் மொத்தம் 6 தொகுதிகள் இருக்க தனது விராலிமலை தொகுதி மக்களை மட்டும் அமைச்சர் இப்படி கவனித்து வருவதால் மற்ற பகுதி மக்கள் அமைச்சர் விஜயபாஸ்கர் செய்வது நியாயமா? என்று கேட்டு வருகிறார்கள்.

சன் டிவி மைக்கை தூக்கி வீசிய அமைச்சர் விஜயபாஸ்கர்

இது ஒருபுறமிருக்க, அமைச்சர் பொங்கல் சீர் கொடுப்பது குறித்து சன் டிவியில் விமர்சனம்செய்து செய்தி வெளியிடப்பட்டது.

இந்நிலையில், இன்று விராலிமலையில் செய்தியாளர்களை சந்தித்தார் அமைச்சர் விஜயபாஸ்கர். அப்போது டேபிளில் பல்வேறு டிவி மைக்குகள் வைக்கப்பட்டன. சன் டிவி மைக்கை பார்த்ததும் ஆத்திரம் அடைந்த விஜயபாஸ்கர், ’’சன் டிவிக்கு நான் பேட்டி கொடுக்க மாட்டேன்.. ’’எடுத்திடுங்க… என்கிறார். தப்பா போட்டா எப்படிங்க.. திமுக கட்சியில எல்லோரும் போடுறாங்க…அத போட வேண்டியதுதான.. எடுத்துடுங்க நான் பேசிக்கிறேன்..’’என்று சொல்லிக்கொண்டே மேஜையில் இருந்த சன் டிவி மைக்கை எடுத்து தூர எடுத்து கடாசினார்.

சன் டிவி மைக்கை தூக்கி வீசிய அமைச்சர் விஜயபாஸ்கர்

அதன்பிறகு, ’’ தப்புங்க… தமிழ்நாடு பூரா எல்லோரும் கொடுக்குறாங்க. நான் மட்டும்தான் கொடுக்கிறேன்னு சொன்னா அது தப்பில்ல.. ..
ஓரவஞ்சமா போறீங்க. …’’என்றார்.

அமைச்சரின் இந்த செயலால் பத்திரிகையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.