சங் பரிவாரிகள் கோட்சேயின் வாரிசுகள் என்பது புரிகிறதா? அருணன்

 

சங் பரிவாரிகள் கோட்சேயின் வாரிசுகள் என்பது புரிகிறதா? அருணன்

“கோட்சே ஞான சாலை” திறந்திருக்கிறது இந்து மகாசபை. பாஜக வணங்கும் சாவர்க்கர், ஆர்எஸ்எஸ்சின் ஹெட்கே வார், ஜனசங்கத்தை துவக்கிய சியாம பிரசாத் முகர்ஜி ஆகியோரை அவர்களும் வணங்கியுள்ளனர். சங் பரிவாரிகள் கோட்சேயின் வாரிசுகள் என்பது புரிகிறதா?’’என்று கேட்கிறார் மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் அருணன்.

சங் பரிவாரிகள் கோட்சேயின் வாரிசுகள் என்பது புரிகிறதா? அருணன்

மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில், மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சேவின் பெயரில் நூலகம் திறந்து வைத்திருக்கிறது விஸ்வ இந்தி திவாஸின் அகில பாரதிய இந்து மகாசபை. நாட்டு பிரிவினையை நாதுராம் கோட்சே ஏன் எதிர்த்தார் என்று இக்கால தலைமுறையினருக்கும், இனி வரும் சந்ததியினருக்கும் தெரியப்படுத்தும் விதமாக இந்த நூலகத்தினை திறந்து வைத்திருப்பதாக அகில பாரதிய இந்து மகாசபையின் துணைத்தலைவர் ஜெய்வீர் பரத்வாஜ் தெரிவித்திருக்கிறார்.

சங் பரிவாரிகள் கோட்சேயின் வாரிசுகள் என்பது புரிகிறதா? அருணன்

கோட்சே பற்றிய நூல்கள் இந்த நூலகத்தில் உள்ளன. மகாத்மா காந்தியின்படுகொலைக்கு கோட்சே எவ்வாறு திட்டம் தீட்டினார் என்பன பற்றிய புத்தகங்கள் எல்லாம் இங்கு உள்ளன. நாட்டுப்பற்றை வளர்க்கும் வகையில் இந்த நூலகம் அமைக்கப்பட்டிருக்கிறது.

முன்னதாக குவாலியரில் கோட்சேவுக்கு கோயில் கட்டப்பட்டது. ஆனால், காங்கிரசாரின் கடும் எதிர்ப்பின் காரணமாக அது அகற்றப்பட்டது. தற்போது கோட்சே பெயரில் நூலகம் அமைக்கப்பட்டிருப்பதும் பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தி இருக்கிறது.

சங் பரிவாரிகள் கோட்சேயின் வாரிசுகள் என்பது புரிகிறதா? அருணன்

இந்த விவகாரத்தில் மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் அருணன், ‘’சங் பரிவாரிகள் கோட்சேயின் வாரிசுகள் என்பது புரிகிறதா?’’ என்ற கேள்வியை எழுப்புகிறார்.