‘கூடுதலாக ரூ.1 வசூலித்தால் ரூ.20 ஆயிரம் அபராதம்’..நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

 

‘கூடுதலாக ரூ.1 வசூலித்தால் ரூ.20 ஆயிரம் அபராதம்’..நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

பேருந்தில் கூடுதலாக ரூ.1 வசூலித்ததால் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாடு முழுவதும் பல அட்டூழியங்கள் நடந்து வந்தாலும், மக்கள் நம்பியிருக்கும் ஒரே இடம் நீதிமன்றமே. அங்கு சென்றால் உரிய நியாயம் கிடைக்கும் என நம்பும் மக்கள், அநீதிக்கு எதிராக வழக்கு தொடர்வதால் மக்களுக்கு சாதகமான பல தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. சமீபத்தில் கூட விவசாய நிலங்களுக்கும் மக்களுக்கும் கேடு விளைவிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது என நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியது. இது போன்ற பல வழக்குகளில், மக்களுக்கு பயனளிக்கும் விதமாக தீர்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பேருந்தில் ரூ.1 அதிகமாக வசூலித்ததால் ரூ.20,000 அபராதம் செலுத்த வேண்டும் என நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

‘கூடுதலாக ரூ.1 வசூலித்தால் ரூ.20 ஆயிரம் அபராதம்’..நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

கடந்த 2017 ஆம் ஆண்டு நெல்லையில் இருந்து தனியார் பேருந்தில் தூத்துக்குடி சென்ற இசக்கிமுத்து என்பவரிடம் இருந்து ரூ.24க்கு பதிலாக ரூ.25 வசூலிக்கப்பட்டுள்ளது. ஒரு ரூபாய் என்றாலும் அது கூடுதல் தொகை தான் என எண்ணிய இசக்கிமுத்து, நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தார். அந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது. அதில், புகார்தாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ.20 ஆயிரம் வழங்க வேண்டும் என அந்த தனியார் பேருந்து உரிமையாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். நீதிமன்றத்தின் இந்த அதிரடி தீர்ப்பு வரவேற்பை பெற்றுள்ளது.