தினமும் 20 ஆயிரம் பேருக்கு கொரோனா சோதனை…13 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன – அரவிந்த் கெஜ்ரிவால்

தினமும் 20 ஆயிரம் பேருக்கு கொரோனா சோதனை…13 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன – அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி: தினமும் 20 ஆயிரம் பேருக்கு கொரோனா சோதனை செய்யப்படுவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

நேற்று தலைநகர் டெல்லியில் 3,600-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 77,240-ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா நோய்த் தொற்று காரணமாக 63 இறப்புகள் டெல்லியில் பதிவாகியுள்ளன. இதன் மூலம் கொரோனா காரணமாக டெல்லியில் இறந்தவர்கள் எண்ணிக்கை 2,492-ஆக உள்ளது.

தினமும் 20 ஆயிரம் பேருக்கு கொரோனா சோதனை…13 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன – அரவிந்த் கெஜ்ரிவால்

இந்த நிலையில், டெல்லியில் நாளொன்றுக்கு கிட்டத்தட்ட 20,000 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டு வருவதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக 13,500 படுக்கைகள் தயார் நிலையில் இருப்பதாகவும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார். அத்துடன், டெல்லி நிர்வாகத்திற்கு போதுமான எண்ணிக்கையிலான கொரோனா வைரஸ் சோதனை கருவிகளை வழங்கிய மத்திய அரசுக்கு கெஜ்ரிவால் நன்றி தெரிவித்தார்.