சென்னை வந்தடைந்தது 20,000 கோவாக்சின் தடுப்பூசிகள்!

 

சென்னை வந்தடைந்தது 20,000 கோவாக்சின் தடுப்பூசிகள்!

பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவாக்சின் தடுப்பூசிகள் விமானத்தின் மூலம் சென்னை வந்தடைந்தன.

கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டதன் பேரில், சீரம் நிறுவனத்திடமிருந்து 1.10 கோடி கோவிஷீல்டு தடுப்பூசிகள் கொள்முதல் செய்யப்பட்டு, நேற்று மாநிலங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, பாரத் பயோடெக் நிறுவனத்திடம் இருந்து 55 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகள் கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்பந்தம் போட்டது. அதன் படி, இன்றும் காலை ஹைதராபாத்தில் இருந்து முதல் பேட்ஜ் தடுப்பூசிகள் டெல்லிக்கும் சென்னைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

சென்னை வந்தடைந்தது 20,000 கோவாக்சின் தடுப்பூசிகள்!

விமானத்தின் மூலம் சென்னை வந்தடைந்த 20,000 தடுப்பூசிகள் தேனாம்போட்டையில் இருக்கும் மாநில தடுப்பு மருந்து கிடங்கில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. நேற்று தமிழகம் வந்த 5,36,500 கோவிஷீல்டு மருந்துகள் தற்போது மாவட்டங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருவதால், கோவாக்சின் மருந்துகள் கிடக்கிலேயே வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைக்கு 44,300 தடுப்பூசிகள் கிடங்கில் இருக்கிறதாம்.

முதலில் முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவிருக்கும் நிலையில், வரும் 16ம் தேதி முதல் அந்த பணி தொடங்கவிருக்கிறது என்பது நினைவு கூரத்தக்கது.