2000 ரூபாய் நோட்டு குறித்து எழும் வதந்திகள் உண்மையல்ல: ரிசர்வ் வங்கி அதிகாரிகள் விளக்கம்

 

2000 ரூபாய் நோட்டு குறித்து எழும் வதந்திகள் உண்மையல்ல: ரிசர்வ் வங்கி அதிகாரிகள் விளக்கம்

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, கள்ள நோட்டுகளின் புழக்கத்தைக் குறைப்பதற்காக ‘இனிமேல் ஆயிரம் ரூபாய் மற்றும் ஐநூறு ரூபாய் நோட்டுகள் செல்லாது’ மத்திய அரசு திடீரென ஒரு அறிவிப்பு வெளியிட்டது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, கள்ள நோட்டுகளின் புழக்கத்தைக் குறைப்பதற்காக ‘இனிமேல் ஆயிரம் ரூபாய் மற்றும் ஐநூறு ரூபாய் நோட்டுகள் செல்லாது’ மத்திய அரசு திடீரென ஒரு அறிவிப்பு வெளியிட்டது. அதனால், பல மக்கள் பாதிக்கப்பட்டனர். கட்டுக் காட்டாகக் கள்ள நோட்டுகள் கால்வாய்களில் மிதந்தன. அதனையடுத்து, புதிய ரூ.2000, ரூ.500, ரூ.100 என புதிய நோட்டுகளை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியது. 

2000 Rupees

அனைத்தும்  இயல்பு நிலைக்குத் திரும்பிய இந்நிலையில், மீண்டும் 2000 ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக 1000 ரூபாய் நோட்டு வெளிவரப் போகிறது. ஜனவரி மாதம் முதல் 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பரவி வருகின்றன. இதனை எண்ணி மக்களும் குழப்பத்தில் உள்ளனர். 

2000 rupees

இது குறித்துப் பேசிய ரிசர்வ் வங்கி அதிகாரிகள், ‘ சமூக வலைத்தளங்களில் பரவி வரும் 2000 ரூபாய் தடை குறித்த கருத்துக்கள் தவறானவை. இதனை மக்கள் யாரும் நம்ப வேண்டாம். இதுவரை 1000 ரூபாய் நோட்டுகளைப் புழக்கத்தில் விடுவது குறித்து எங்களுக்கு அதிகாரப் பூர்வமான எந்த அறிவிப்பும் வரவில்லை. மத்திய அரசு அறிவித்தால் தான் ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்படும், அதுவரை சமீபத்தில் வெளியிடப் பட்ட அனைத்து நோட்டுகளும் புழக்கத்தில் தான் இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.