2000 நோட்டுகள் பரிவர்த்தனையை நிறுத்த காரணம் என்ன? இந்தியன் வங்கி விளக்கம்

 

2000 நோட்டுகள் பரிவர்த்தனையை நிறுத்த காரணம் என்ன? இந்தியன் வங்கி விளக்கம்

இந்தியன் வங்கி மார்ச் 1 முதல் 2000 ரூபாய் பரிவர்த்தனையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது என இன்று காலையிலிருந்து சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. 
இதுகுறித்து அறிய இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் அகில இந்தியச் செயலாளர் (BEFI) கே.கிருஷ்ணனிடம் ‘விசாரித்த போது அவர் கூறியது

 

இந்தியன் வங்கி மார்ச் 1 முதல் 2000 ரூபாய் பரிவர்த்தனையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது என இன்று காலையிலிருந்து சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. 

இதுகுறித்து அறிய இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் அகில இந்தியச் செயலாளர் (BEFI) கே.கிருஷ்ணனிடம் ‘விசாரித்த போது அவர் கூறியதாவது:

இந்தியன் வங்கி வரும் மார்ச் 1 முதல் 2000 ரூபாய் நோட்டுகளின் பரிவர்த்தனையை நிறுத்த உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறதே. உண்மையா?

வங்கிப் பரிவர்த்தனையில் அல்ல. ஏடிஎம்மில் நோட்டுகளை வைப்பதில் புதிய முடிவெடுத்துள்ளோம்.

indian-bank-09

ஏடிஎம்களில் 2000 ரூபாய் நோட்டுகளை வைக்கக்கூடாது என முடிவெடுக்க என்ன காரணம்?

ஏடிஎம்களில் பொதுவாகப் பணம் எடுப்பவர்கள் 4 ஆயிரம், 6 ஆயிரம் என எடுத்தால் முழுவதும் 2000 ரூபாய் நோட்டுகளே வரும். இதனால் வாடிக்கையாளர்கள் வங்கிக்குள் வந்து சில்லறை கேட்கின்றனர். வங்கியின் அடிப்படை நோக்கமே வங்கி வாடிக்கையாளர்கள் பணப் பரிவர்த்தனைக்காக வங்கியைப் பயன்படுத்துவதைக் குறைப்பதே. அதற்காகத்தான் ஏடிஎம்கள் கொண்டுவரப்பட்டன.

2000-rs-in-atm

தற்போது என்ன முடிவு எடுக்கப்பட்டுள்ளது?

ஏடிஎம்களில் 2000 ரூபாய் நோட்டுகளே பெரும்பாலும் வருவதால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். சில்லறைக்காக அலையும் நிலை ஏற்படுகிறது. இதைத் தடுக்க இனி இந்தியன் வங்கி ஏடிஎம்களில் 2000 ரூபாய் நோட்டுகள் நிரப்பப்படாது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அதாவது இந்தியன் வங்கி ஏடிஎம்களில் 500, 200, 100 ரூபாய் நோட்டுகள் மட்டுமே நிரப்பப்படும். 2000 ரூபாய் நோட்டுகள் உள்ள டிரே நிரப்பப்படாது என முடிவு. இதைத்தான் திரித்துச் சொல்கிறார்கள்.