200 km/hr வேகத்தில் வீசும் ஃபனி புயல்; தாக்குப்பிடிக்குமா ஒடிசா?!….

 

200 km/hr வேகத்தில் வீசும் ஃபனி புயல்; தாக்குப்பிடிக்குமா ஒடிசா?!….

ஃபனி புயலின் தாக்கம் மோசமானதாக இருக்கும் என்பதால் மாநில, மத்திய அரசாங்கங்கள் பாதுகாப்பு பணிக்காக ஆயத்தப்படுத்தப்பட்டுள்ளது. வருகிற வெள்ளிக் கிழமை புயல் கரையை கடக்கும் என மாநில அரசாங்கம் அறிவிப்பு விடுத்துள்ளது.

புவனேஷ்வர்: ஃபனி புயல் ஒடிசா பக்கம் திரும்பியிருப்பதால் அம்மாநிலத்தை சேர்ந்த 20 பேரிடர் மேலாண்மை குழுவும், மத்திய அரசின் 12 பேரிடர் மேலாண்மை குழுவும் தயார் நிலையில் உள்ளன. 

தமிழகத்தின் கடற்கரையோர பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தும் என கூறப்பட்ட ஃபனி புயல், ஒடிசா பக்கம் திரும்பியுள்ளது. ஃபனி புயலின் தாக்கம் மோசமானதாக இருக்கும் என்பதால் மாநில, மத்திய அரசாங்கங்கள் பாதுகாப்பு பணிக்காக ஆயத்தப்படுத்தப்பட்டுள்ளது. வருகிற வெள்ளிக் கிழமை புயல் கரையை கடக்கும் என மாநில அரசாங்கம் அறிவிப்பு விடுத்துள்ளது.

ஃபனி

இந்திய வானிலை ஆராய்ச்சி மையம், மே 3-ஆம் தேதி மாலை புரி மாவட்டத்தின் பக்கம் புயல் கரையை கடக்கும் என கணித்திருக்கிறது. இதனால் அம்மாநிலத்தை சேர்ந்த 20 பேரிடர் மேலாண்மை குழுவும், மத்திய அரசின் 12 பேரிடர் மேலாண்மை குழுவும் தயார் நிலையில் உள்ளதென பேரிடர் மேலாண்மைக் குழு ஆணையர் பிஷ்னுபடா செதி தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், கஜபதி, கஞ்சம், புரி, கேந்த்ரபடா, பத்ரக், ஜகத்சிங்பூர், ஜெய்பூர், கட்டாக், மயூர்பஞ்ச் மற்றும் குத்ரா ஆகிய மாவட்டங்களின் கலெக்டர்களை சூழ்நிலைக்கு ஏற்றபடி விரைந்து செயல்பட அறிவுறுத்தியிருக்கிறோம் என்றார்.

ஃபனி

879 புயல் நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைத்திருக்கிறோம். ஃபனி புயலின் தாக்கம் மிகத் தீவிரமாக இருக்கும், 200 km/hr வேகத்தில் இது கரையை கடக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.