200 கிராமில் கையடக்க கணினி : மாணவனை நேரில் அழைத்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

 

200 கிராமில் கையடக்க கணினி : மாணவனை நேரில் அழைத்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

கையடக்க கணினி மையச் செயலாக்க கருவியை (CPU) உருவாக்கிய 9ஆம் வகுப்பு மாணவனை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

200 கிராமில் கையடக்க கணினி : மாணவனை நேரில் அழைத்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

கையடக்க கணினி மைய செயலாக்க கருவியை உருவாக்கிய திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த இளம் விஞ்ஞானி எஸ்.எஸ் மாதவ்வை முதல்வர் ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமை செயலகத்தில் திருவாரூர் மாவட்டம் பழவனக்குடி கிராமத்தை சேர்ந்த மாதவ் என்கின்ற மாணவன் நேரில் சந்தித்து புதிதாக உருவாக்கிய கையடக்க கணினி மைய செயலாக கருவியை காண்பித்து வாழ்த்து பெற்றார். கணினியில் மிகுந்த ஆர்வம் கொண்ட மாணவன் மாதவ் கணினி மொழிகளான java, python, c, c++, kotin ஆகியவற்றை படித்துள்ளார். இவர் கொரோனா ஊரடங்கு காலத்தில் பள்ளிகள் திறக்கப்படாத விலையில் கையடக்க மினி சிபியுவை கண்டுபிடித்து உள்ளதாகவும் இதற்காக இரண்டு ஆண்டுகளாக கடுமையாக முயற்சித்து வெற்றி பெற்றுள்ளார் என்பதை கேள்விப்பட்ட முதல்வர் ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டினார்.

இக்கருவி அனைவரிடத்திலும் சென்று அடைய ஏதுவாக என்ற நிறுவனத்தைத் தொடங்கி இணையதளம் மூலமாக மிகவும் குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகிறார் என்ற தகவலைக் கேட்டு அறிந்த முதல்வர் ஸ்டாலின் அம்மாணவனை நேரில் அழைத்து வாழ்த்தினார். அத்துடன் மாணவன் மாதவ் கண்டுபிடிப்பை பாராட்டிய முதல்வர் கணினி தொடர்பான அவரது உயர் படிப்பிற்கும், ஆராய்ச்சிக்கும் தமிழ்நாடு அரசு அனைத்து விதமான உதவிகளை செய்யும் என்று உறுதி அளித்துள்ளார் . இந்த நிகழ்வின்போது மாணவனின் பெற்றோரும் உடன் இருந்தனர்.