Home தமிழகம் "தூய்மை பணியாளர்கள் 200 பேருக்கு மீண்டும் பணி" - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

“தூய்மை பணியாளர்கள் 200 பேருக்கு மீண்டும் பணி” – சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

தூய்மை பணியாளர்கள் அனைவரையும் பணிநீக்கம் செய்யவில்லை என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

Nearly-700-Sanitary-Workers-were-asked-to-leave-their-Job-By-Chennai-Corporation

கொரோனா பேரிடர் காலத்தில் சிறப்பாக பணியாற்றியவர்களில் துப்புரவு பணியாளர்களும் அடங்குவர். கொரோனா உச்சத்தில் இருந்த மார்ச் முதல் ஆகஸ்ட் மாதங்கள் வரை இவர்கள் தங்கள் குடும்பங்களை மறந்து இரவு பகல் பாராமல் தீவிரமாக செயல்பட்டனர். தற்போது கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் சென்னை மாநகராட்சியில் பணிசெய்து வரும் துப்புரவு பணியாளர்கள் 700 பேரை வேலையை விட்டு விலக மாநகராட்சி அறிவித்துள்ளது. இதற்கு மு.க. ஸ்டாலின், டிடிவி தினகரன் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், சென்னையில் கூடுதலாக தடுப்பூசி மையம் அமைக்க, மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. தடுப்பூசி செலுத்திக்கொண்ட அனைவரும் நலமாக உள்ளனர் என்றார். தொடர்ந்து பேசிய அவர், தூய்மை பணியாளர்கள் அனைவரையும் பணிநீக்கம் செய்யவில்லை. நீக்கப்பட்ட 200 பேருக்கு மீண்டும் பணிவழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

மாவட்ட செய்திகள்

Most Popular

வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை அதிரடியாக குறைத்த எஸ்பிஐ!

கொரோனா ஊடரங்கு காரணமாக தொழில்கள் முடங்கியதுடன் , பலருக்கும் வேலை இழப்பு, தொழில் முடக்கம் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட்டு வருவாய் பாதிக்கப்பட்டது.இந்த நிலையில், வங்கிக் கடன் வாங்கியவர்களுக்கு 6 மாதங்கள்...

பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது? திருமாவளவன் பளீர்

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரம், கூட்டணி, தொகுதி பங்கீடுபோன்ற முக்கிய பணிகளை மேற்கொண்டு வருகின்றன. அதிமுக பாமகவுடனான...

எம்.ஜி.ஆர். வழி செல்லும் கமல்ஹாசன்!

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தென்சென்னை தொகுதி, மயிலாப்பூர் , திநகர் மற்றும் ஆலந்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று அதிமுக,...

சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டி! ஓவைசி அதிரடி

தமிழகத்தில் இஸ்லாமியர்களின் வாக்குகள் அதிமுக - திமுக என இருகட்சிகளுக்குமே சென்றாலும், முஸ்லீம்களின் வாக்குகள் பெரும்பாலும் திமுகவுக்கே சாதகமாக அமைந்து வருகின்றன. அதற்கு திமுகவுடன் உள்ள கூட்டணி கட்சிகளான மனிதநேய...
TopTamilNews