முழு ஊரடங்கிலும்… சென்னையில் மாநகர பேருந்துகள் இயக்கம்!

 

முழு ஊரடங்கிலும்… சென்னையில் மாநகர பேருந்துகள் இயக்கம்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தும் பொருட்டு இன்று முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகள் மட்டுமே வழக்கம் போல இயங்குகின்றன. காய்கறிகள், மளிகை கடைகள், பல சரக்கு கடைகள், இறைச்சி கடைகள் இன்று நண்பகல் 12 மணி வரை மட்டுமே செயல்படவுள்ளன.

முழு ஊரடங்கிலும்… சென்னையில் மாநகர பேருந்துகள் இயக்கம்!

வரும் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட உள்ள நிலையில், பேருந்துகள், ரயில்கள் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆட்டோ, டேக்சிக்கள் கூட இயங்காது என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே, முன்களப் பணியாளர்கள் வழக்கம் போல பணியை தொடருவதால் அவர்கள் சென்று வருவதற்கு ஏதுவாக பேருந்துகளை இயக்க வேண்டுமென கோரிக்கை எழுந்தது.

இந்த கோரிக்கையை பரிசீலித்த சென்னை மாநகர போக்குவரத்து கழகம், சென்னையில் அத்தியாவசிய, அவசர பணியாளர்களுக்காக 200 மாநகரப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவித்துள்ளது. ஊரடங்கு அமலில் உள்ளதால் இன்று முதல் முக்கிய வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தேவைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு முழு ஊரடங்கின் போதும் இதே போன்று பேருந்துகள் இயக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.