ரஜினி -200, விஜய் -300: அசத்தும் அதிமுக

 

ரஜினி -200, விஜய் -300: அசத்தும் அதிமுக

ரஜினி கட்சி தொடங்கவில்லை என்று அறிவித்த பின்னர் அவரது மன்றத்தில் இருப்போர் விருப்பப்பட்ட கட்சிகளில் இணைந்து செயல்படலாம் என்றும் ரஜினி அறிவித்துவிட்டதால் மன்றத்தின் நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் 200க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்.

ரஜினி -200, விஜய் -300: அசத்தும் அதிமுக

கட்சி தொடங்குவதில் விஜய் – எஸ்.ஏ.சந்திரசேகர் இருவரும் ஏகப்பட்ட குளறுபடிகளை செய்து வருவதால் அவரது மன்றத்தினரும் 300க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்.

தென்சென்னை தெற்கு மாவட்டம் சைதாப்பேட்டை பகுதி அதிமுக செயலாளர் எம். சுகுமார் ஏற்பாட்டில், ரஜினிரவி மற்றும் ரஜினிமுருகன் ஆகியோரின் தலைமையில் ரஜினி மன்றத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோரும், விஜய் மக்கள் மன்றத்தைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டவர்கள், அவரவர் மன்றங்களில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர்.

ரஜினி -200, விஜய் -300: அசத்தும் அதிமுக

தென்சென்னை தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் விருகம்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான விருகை ரவி முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கழக செயலாளர் விருகை ரவி எம்எல்ஏ பங்கேற்று பேசினார். அப்போது, அவர் தமிழ்நாட்டில் பன்னாட்டு நிறுவனங்கள் புதியதாக தொழில் தொடங்க செய்து அதன் மூலம் பட்டதாரி முதல் அனைத்து தரப்பினருக்கும் அம்மாவின் அரசு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது சுய தொழில் தொடங்க பல்வேறு வகையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் ஈர்க்கப்பட்டு தான் பல்வேறு அமைப்புகளில் இருப்போர் அதிமுகவில் இணைந்து வருகிறார்கள் என்றார்.