200 கோடி ஹேக்கிங்கை தடுத்த பெண் போலீஸ்… கொலைவெறி தாக்குதல் நடத்திய திருட்டு கும்பல்!

 

200 கோடி ஹேக்கிங்கை தடுத்த பெண் போலீஸ்… கொலைவெறி தாக்குதல் நடத்திய திருட்டு கும்பல்!

சனிக்கிழமை இரவு, பால்கர் காவல்துறையின் உள்ளூர் குற்றப்பிரிவு பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் கொலை முயற்சியில் இருந்து தப்பியுள்ளார். மும்பை-அகமதாபாத் நெடுஞ்சாலையின் விரார் சாலையில்  தனது காரை ஓட்டிக்கொண்டிருந்தபோது, சப் இன்ஸ்பெக்டர் சித்தவா ஜெய்பாயே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல்கள் நடத்தியதாக பால்கர் போலீசார் தெரிவித்தனர்.

 

சனிக்கிழமை இரவு, பால்கர் காவல்துறையின் உள்ளூர் குற்றப்பிரிவு பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் கொலை முயற்சியில் இருந்து தப்பியுள்ளார்.

மும்பை-அகமதாபாத் நெடுஞ்சாலையின் விரார் சாலையில்  தனது காரை ஓட்டிக்கொண்டிருந்தபோது, சப் இன்ஸ்பெக்டர் சித்தவா ஜெய்பாயே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல்கள் நடத்தியதாக பால்கர் போலீசார் தெரிவித்தனர்.

“ஜாக்கெட்டுகள் மற்றும் முகமூடிகளை அணிந்திருந்த இரண்டு நபர்கள்,  பஜாஜ் பல்சர் பைக்கில் பின்தொடர்ந்து வந்தனர், பின்னாள் அமர்ந்திருந்தவன்  ஜெய்பாயேவின் காரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளான். ஜெயபாயே உடனடியாக தனது காரை நிறுத்தி, அந்த துப்பாக்கிசூடு காரில் முன்பகுதியில் விழுந்தது, ”என்று பால்கர் போலீஸ் அதிகாரி கூறினார்.

hacking

ஏழு நபர்களை கொண்ட குழு ஒன்று ஒரு தனியார் நிறுவனத்தின் அக்கௌன்ட்டை ஹேக்கிங் செய்து 200 கோடி திருட முயன்றுள்ளனர். அந்த முயற்சியைத் தடுத்ததில் இவர் முக்கிய பங்கு வகித்தார். அதற்காக இந்த துப்பாக்கிசூடு நடத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.