“பப்ஜி கேம் விளையாடி படிப்பு போச்சி ,இப்ப உயிரும் போச்சி” -செல்போன் கேம் க்கு அடிமையான மாணவன் -விடமுடியாததால் தற்கொலை .

“பப்ஜி கேம் விளையாடி படிப்பு போச்சி ,இப்ப உயிரும் போச்சி” -செல்போன் கேம் க்கு அடிமையான மாணவன் -விடமுடியாததால் தற்கொலை .

செல்போனில் இருக்கும் ‘பப்ஜி கேம்’க்கு அடிமையான ஒரு கல்லூரி மாணவன் ,அவரின் தந்தை திட்டியதால்,அதை நிறுத்த முடியாததால் , துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பல செல்போன் கேம் அடிமைகளிடம் பயத்தை உண்டு பண்ணியுள்ளது.

“பப்ஜி கேம் விளையாடி படிப்பு போச்சி ,இப்ப உயிரும் போச்சி” -செல்போன் கேம் க்கு அடிமையான மாணவன் -விடமுடியாததால் தற்கொலை .

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் மாணிக் சர்மா என்பவர் ஒரு மெடிக்கல் ஷாப் நடத்துகிறார் .அவருக்கு 20 வயதாகும் ஒரு மகனிருந்தார் ,அவர் அங்குள்ள ஒரு கல்லூரியில் BBA படித்து வருகிறார்.அவரின் மகன் எந்நேரமும் செல்போனில் பப்ஜி கேம் விளையாடிக்கொண்டிருப்பாராம் .இதனால் அந்த மாணவனால் படிப்பில் கவனம் செலுத்த முடியாததால் எக்ஸாமில் மார்க் குறைவாக வாங்கியுள்ளார் .

அவரின் மார்க்கை பார்த்த அவரின் தந்தை ,’எந்நேரமும் செல்போனில் பப்ஜி கேம் விளையாடினால் எப்படி மார்க் வாங்க முடியும் ‘என்று திட்டி அவரின் செல்போனை பறித்து வைத்துக்கொண்டார் .
இதனால் செல்போனின் அந்த கேம் க்கு அடிமையான அந்த மாணவனால் செல்போன் இல்லாமல் இருக்கமுடியவில்லை ,மேலும் அந்த கேம் விளையாடாமல் அவர் கடும் மன அழுத்தத்துக்கு ஆளானார் .
இதனால் கடந்த வியாழக்கிழமையன்று மதியம் அவரின் தந்தை கடைக்கு போனதும் ஒரே வரியில் “நான் மோசமானவன் ” என்று ஒரு தற்கொலை குறிப்பினை எழுதி வைத்து விட்டு, வீட்டிலிருந்த துப்பாக்கியால் தன்னை சுட்டு கொண்டு இறந்தார் .
இந்த சம்பவம் பற்றி அவரின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் தற்கொலை வழக்கினை பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள் .

“பப்ஜி கேம் விளையாடி படிப்பு போச்சி ,இப்ப உயிரும் போச்சி” -செல்போன் கேம் க்கு அடிமையான மாணவன் -விடமுடியாததால் தற்கொலை .