டெல்லி: உலகின் மிகப்பெரிய கொரோனா சிகிச்சை மையத்திற்கு 20 டிரான்ஸ்பார்மர்கள் மூலம் மின்சாரம்

 

டெல்லி: உலகின் மிகப்பெரிய கொரோனா சிகிச்சை மையத்திற்கு 20 டிரான்ஸ்பார்மர்கள் மூலம் மின்சாரம்

டெல்லி: டெல்லியில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய கொரோனா சிகிச்சை மையத்திற்கு 20 டிரான்ஸ்பார்மர்கள் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.

தலைநகர் டெல்லியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தெற்கு டெல்லியில் உள்ள ராதா சோமி ஆன்மீக மையத்தில் 10 ஆயிரம் படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இது தான் உலகிலேயே மிகப்பெரிய கொரோனா சிகிச்சை மையம் என்று கூறப்படுகிறது. இதன் பரப்பளவு 12,50,000 சதுர அடியாகும். அதாவது தோராயமாக 20 கால்பந்து மைதானங்களின் பரப்பளவுக்கு நிகரானது என்று கூறப்படுகிறது.

டெல்லி: உலகின் மிகப்பெரிய கொரோனா சிகிச்சை மையத்திற்கு 20 டிரான்ஸ்பார்மர்கள் மூலம் மின்சாரம்

இந்த தற்காலிக கொரோனா சிகிச்சை மையத்திற்கு 18 மெகாவாட் சுமையைத் தாங்கக்கூடிய 20 டிரான்ஸ்பார்மர்கள் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதற்காக 22 கிலோ மீட்டர் நீளத்திற்கு நிலத்தடியில் கேபிள்கள் பொருத்தப்பட்டுள்ளன. சமீபத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை முதல்வர் மனிஷ் சிசோடியா ஆகியோர் இந்த கொரோனா சிகிச்சை மையத்தின் ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.