வாணியம்பாடியில் 20 டன் கடத்தல் ரேஷன் அரிசி பறிமுதல் – ஒருவர் கைது

 

வாணியம்பாடியில் 20 டன் கடத்தல் ரேஷன் அரிசி பறிமுதல் – ஒருவர் கைது

திருப்பத்தூர்

வாணியம்பாடி அருகே கர்நாடகாவுக்கு கண்டெய்னர் லாரியில் கடத்தமுயன்ற 20 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக லாரி ஓட்டுனரை கைதுசெய்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரம் பகுதியிலிருந்து, பெங்களூருவுக்கு வாணியம்பாடி வழியாக லாரி மூலம் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில், வாணியம்பாடி அடுத்த நெக்குந்தி சுங்கச்சாவடியில் டி.எஸ்.பி பழனிசெலவம் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

வாணியம்பாடியில் 20 டன் கடத்தல் ரேஷன் அரிசி பறிமுதல் – ஒருவர் கைது

அப்போது, அந்த வழியாக பெங்களூர் நோக்கி சென்ற கண்டெய்னர் லாரியை மடக்கி போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது, லாரியில் மூட்டை மூட்டையாக ரேசன் அரிசி இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து, லாரியில் இருந்த சுமார் 20 டன் ரேஷன் அரசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய கண்டெய்னர் லாரியை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக லாரி ஓட்டுநர் நாகராஜை கைது செய்தனர்.

தொடர்ந்து, லாரியுடன் பிடிபட்ட 20 டன் ரேஷன் அரிசி குடிமை பொருள் வழங்கல் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவை ஆம்பூர் அடுத்த கில்முருங்கை பகுதியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் வட்ட செயல்முறை கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது. மேலும் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக அம்பலூர் போலீசார் வழக்கு பதிவுசெய்து, லாரி ஓட்டுநர் நாகராஜிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.