ஓய்வுபெற்ற அரசு ஊழியர் வீட்டில் கத்திமுனையில் 20 சவரன் நகை கொள்ளை!

 

ஓய்வுபெற்ற அரசு ஊழியர் வீட்டில் கத்திமுனையில் 20 சவரன் நகை கொள்ளை!

திண்டுக்கல்

திண்டுக்கல்லில் ஓய்வுபெற்ற அரசு ஊழியரின் வீட்டில், மர்மநபர்கள் கத்தி முனையில் 20 சவரன் தங்க நகைகளை திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் சென்னமநாயக்கன்பட்டி அருகே உள்ள சக்திமுருகன் நகரை சேர்ந்தவர் பழனி(57). ஓய்வுபெற்ற அரசு ஊழியர். இவரது மனைவி அருந்ததி(50). ஆசிரியை. இவர்களது மகன் ராகுல் (24). இந்த நிலையில், நேற்று இரவு தம்பதியினர் இருவரும் தங்களுடைய அறையில் படுத்து தூங்கி கொண்டிருந்தனர். அந்த பகுதியில் நள்ளிரவில் கனமழை பெய்த நிலையில், அதனை பயன்படுத்தி முகமூடி அணிந்த மர்மநபர்கள் சிலர், பின்பக்க கேட்டை உடைத்து வீட்டின் உள்ளே புகுந்தனர்.

ஓய்வுபெற்ற அரசு ஊழியர் வீட்டில் கத்திமுனையில் 20 சவரன் நகை கொள்ளை!

பின்னர், அறையில் தூங்கிய பழனி மற்றும் அருந்ததியை கத்தி முனையில் மிரட்டி, வீட்டில் இருந்த இருந்து 20 சவரன் தங்க நகைகளை திருடிக் கொண்டு தப்பியோடினர். இதனையடுத்து, மாடியில் தூங்கிக் கொண்டிருந்த ராகுலை எழுப்பி, நடந்தவற்றை தெரிவித்தனர். இதுகுறித்து உடனடியாக அவர் தாடிக்கொம்பு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். அதன் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், நேரில் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், மோப்ப நாய் ரூபி மற்றும் தடயவியல் நிபுணர்களை வரவழைத்து கொள்ளையர்களின் கைரேகை பதிவுகளை சேகரித்தனர். தொடர்ந்து, கொள்ளை சம்பவம் குறித்து பழனி அளித்த புகாரின் பேரில் தாடிக்கொம்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.