டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ்வழி மாணவர்களுக்கு 20% இட ஒதுக்கீடு! தமிழக அரசு அடுத்த அதிரடி

 

டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ்வழி மாணவர்களுக்கு 20% இட ஒதுக்கீடு! தமிழக அரசு அடுத்த அதிரடி

20 சதவீதம் தமிழ்வழி இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்துள்ளார்.

அரசுப்பணிகளில் தமிழ் வழியில் படித்தோருக்கான முன்னுரிமை இட ஒதுக்கீட்டு சட்டம் கடந்த 2010 ஆம் ஆண்டு தமிழக அரசால் கொண்டுவரப்பட்டது. அந்த சட்டத்தில் சில திருத்தங்கள் மட்டும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு செய்யப்பட்டது. ஆனால் 8 மாதங்களாக அம்மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் வழங்காததால் நிலுவையில் இருந்தது. மசோதாவுக்கு ஆளுநர் எப்போது ஒப்புதல் அளிப்பார் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஏற்கனவே கேள்வி எழுப்பியிருந்தது.

டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ்வழி மாணவர்களுக்கு 20% இட ஒதுக்கீடு! தமிழக அரசு அடுத்த அதிரடி

இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வு தமிழ்வழி மாணவர்களுக்கு 20% இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் வழங்கியுள்ளார். அதன்படி நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியை முழுவதுமாக தமிழ் வழியில் பெற்றிருந்தால் இந்த மசோதவின் மூலம் பலன் அடைய முடியும். உதாரணமாக குரூப் 1 மற்றும் குரூப் 2 பணியிடங்களுக்கு 1 ஆம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரை தமிழ் வழியில் பயின்றிருந்தால் மட்டுமே இட ஒதுக்கீடு பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.