இளையராஜாவின் 20 பாடல்கள் 20 ஓவியங்களாக மாறும் கலைப் புரட்சி… மெலடி ஆப் கேன்வாஸ் !

 

இளையராஜாவின் 20 பாடல்கள் 20 ஓவியங்களாக மாறும் கலைப் புரட்சி… மெலடி ஆப் கேன்வாஸ் !

இசைக்கு மயங்காதோர் உண்டோ என்ற வாக்கியத்தின் பொருள் நம் அனுபவித்திருப்போம். நமது வாழ்வின் அனைத்து நிலைகளிலும் மனதை கொள்ளை கொள்ளும் இசைகளை வழங்கியவர் நம் இசைஞானி. அப்படி இளையராஜா அவர்கள் இசையமைத்த 20 பாடல்களை நம் கண் முன் கொண்டுவருமாறு 20 பிரபல ஓவியர்கள் பாடல்களின் பாதிப்பில் ஓவியங்களைத் தீட்டப்போகிறார்கள். மெலடி ஆன் கேன்வாஸ் என்ற இந்த ஓவிய ஆன்லைன் சேவையை ஒருங்கிணைத்திருப்பவர் திவ்யா கோரேசான் நாயர்.

இளையராஜாவின் 20 பாடல்கள் 20 ஓவியங்களாக மாறும் கலைப் புரட்சி… மெலடி ஆப் கேன்வாஸ் !

இதன்மூலம் திரட்டப்படும் நிதி ஆதரவற்ற மக்களுக்கு அளிக்கப்படவுள்ளது.
மெலடி ஆன் கேன்வாஸ் கண்காட்சியில் சுப்ரதா தாஸ், அமல் பவார், சச்சின் சாக்ரே, மனோகர், விஸ்வம், ராஜ்குமார் ஸ்தபதி, கதவு சந்தானம், கார்த்திகேயன், இளையராஜா, ஜி. சுப்ரமணியம், ஜேஎம்எஸ் மணி உள்ளிட்ட ஆசியாவின் புகழ்பெற்ற இருபது கலைஞர்கள் இசைஞானியின் இசையில் உருகி ஓவிய ராகங்களை மீட்டியுள்ளார்கள்.
சிங்கப்பூரில் உள்ள ஞானி ஆர்ட்ஸ் என்ற ஓவியக்கலைக்கூடம் நடத்தும் ஆன்லைன் ஓவியக்காட்சியில் ஆசியாவைச் சேர்ந்த புகழ்பெற்ற ஓவியக் கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர். இசையும் ஓவியும் ஒன்றாகக் கலந்து புதிய கலை வடிவமாக மாறப்போகிறது.

இளையராஜாவின் 20 பாடல்கள் 20 ஓவியங்களாக மாறும் கலைப் புரட்சி… மெலடி ஆப் கேன்வாஸ் !

இந்திய நேரப்படி நாளை இரவு எட்டு மணிக்கும் சிங்கப்பூர் நேரப்படி இரவு 10.30 மணிக்கும் இன்ஸ்டாகிராம் வழியாக இசைஞானி இளையராஜா, மெலடி ஆன் கேன்வாஸ் ஓவியக்கலைஞர்களுடன் உரையாடவுள்ளார். மேலும், அப்போது ஓவியர்களின் பெயிண்டிங் செய்யும் மேக்கிங் வீடியோவும் வெளியாகும்.
ஆன்லைன் லைவ் நிகழ்ச்சியைக் காண லிங்க்: https://ilaiaraajalive.com/isaiott -https://www.instagram.com/isaiott

மெலடி ஆன் கேன்வாஸ் ஓவியங்களின் தொகுப்பைக் காண: https://gnaniarts.com/