இந்திய கிரிக்கெட் வீரர்கள் சம்பளத்தில் 20 % கட் – ஏன் தெரியுமா?

 

இந்திய கிரிக்கெட் வீரர்கள் சம்பளத்தில் 20 % கட் – ஏன் தெரியுமா?

ஆஸ்திரேலியா – இந்தியா தொடரின் முதல் ஒருநாள் போட்டி நேற்று சிட்டி மைதானத்தில் நடந்தது. முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி, 374 ரன்கள் எடுத்தது. ஸ்மித், ஆரோன் பின்ச் இருவருமே சதம் அடித்தனர். மேஸ்வெல் 19 பந்துகளில் ரன்கள் விளாசினார்.

375 ரன்கள் எனும் வெற்றி இலக்கை வைத்து ஆடத் தொடங்கியதில் முக்கிய பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் 308 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், ஆஸ்திரேலியாவிடம் 66 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

இந்திய கிரிக்கெட் வீரர்கள் சம்பளத்தில் 20 % கட் – ஏன் தெரியுமா?

தோல்விக்கான காரணம் பற்றிச் சொன்னபோது 25 ஓவர்களுக்குப் பிறகு இந்திய வீரர்கள் சோர்வாகி விட்டனர். அது அவர்களின் ஆட்டத்தில் வெளிபட்டது என்று தெரிவித்திருந்தார்.

உண்மையில், ஆஸ்திரேலிய வீரர்கள் இந்திய பவுலர்களின் பந்துகளை பவுண்ட்ரிக்கும் சிக்ஸருக்கு விளாச திணறினார்கள். அதனால், மீண்டும் மீண்டும் திட்டமிட்டு கேப்டனும் விவாதித்து பந்து வீசினார்கள். இதனால், பந்து வீசுவதற்கு நேரம் அதிகமானது. அதுவே வீரர்களின் சம்பளத்தில் பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய கிரிக்கெட் வீரர்கள் சம்பளத்தில் 20 % கட் – ஏன் தெரியுமா?

இந்திய அணி பவுலிங் வீச குறிப்பிட்ட நேரத்தைக் கடந்து நிறைய நேரம் எடுத்துக்கொண்டதால், இந்திய வீரர்கள் அனைவரின் சம்பளத்திலிருந்தும் 20 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டிகிறது.

நாளை இரு அணிகளுக்குமான இரண்டாம் ஒருநாள் போட்டி நடக்கிறது. இதில் வெல்ல வேண்டிய கட்டாயம் இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ளது. இல்லையெனில் ஒருநாள் தொடரை இழக்க வேண்டியிருக்கும்.