லாட்டரியில் விழுந்த 20 கோடி ரூபாய் பணம் – யாரும் வாங்காததால் காலாவதியானது

லாட்டரியில் விழுந்த 20 கோடி ரூபாய் பணம் – யாரும் வாங்காததால் காலாவதியானது

லண்டனில் ஒரு அதிர்ஷ்டசாலிக்கு 20 கோடி ரூபாய் பணம் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டு 6 மாதங்கள் வரைக்கும் காலக்கெடு கொடுத்திருந்தும் யாரும் வாங்க வராததால் அந்த பணம் நிதியுதவி திட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட இருக்கிறது.

லாட்டரியில் விழுந்த 20 கோடி ரூபாய் பணம் – யாரும் வாங்காததால் காலாவதியானது

தெற்கு லண்டனில் லீவிஸாம் கடையில் வாங்கப்பட்ட VSHS38986 என்ற எண்ணுக்கு பத்து லட்சம் பவுண்ட்கள் அதாவது 20 கோடி ரூபாய் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த பரிசுத்தொகையை யாரும் வாங்க வரவில்லை. இதனால் 6 மாதம் வரைக்கும் காலக்கெடு விதிக்கப்பட்டது. 6 மாதங்கள் கடந்த பின்னரும் யாரும் வாங்க வராததால் நேற்று நள்ளிரவும் காலக்கெடு முடிந்தது.

அந்த நபர் 20 கோடிரூபாய் பரிசுத்தொகையை இழந்துவிட்டார். அந்த பணத்தை ஏதேனும் ஒரு நிதியுதவி திட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று லாட்டரி நிறுவனம் அறிவித்துள்ளது.