தஞ்சையில் மேலும் 20 கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா!

 

தஞ்சையில் மேலும் 20 கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா!

தஞ்சை

ஒரத்தநாடு கால்நடை கல்லூரியில் படிக்கும் 20 மாணவர்களுக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது. இதனால், தஞ்சை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 225 ஆக உயர்ந்து உள்ளது.

தஞ்சை அம்மாபேட்டையில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில், கடந்த 2 வாரங்களுக்கு முன் முதன்முறையாக மாணவிகள், ஆசிரியர்கள் என 50-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. தொடர்ந்து, தஞ்சை, கும்பகோணம், பட்டுக்கோட்டை என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள 13 பள்ளிகள், 3 கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் என நேற்று வரை 205 பேருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தஞ்சையில் மேலும் 20 கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா!


நோய் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக, தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் சுகாதாரத் துறையினர் சிறப்பு முகாம்கள் அமைத்து தீவிர பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதில் இன்று காலை வெளியான பரிசோதனை முடிவுகளில், ஒரத்தநாடு கால்நடை கல்லூரியில் பயிலும் 20 மாணவர்களுக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு உள்ளது.

இதனை அடுத்து, அந்த மாணவர்கள் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். புதிய பாதிப்பு காரணமாக தஞ்சையில் கொரோனா பாதிப்புக்குள்ளான மாணவர்களின் எண்ணிக்கை 225 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 100-க்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்து வீடு திரும்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.