20 நிமிட சந்திப்பு.. 20 சீட் கேட்ட வைகோ.. ஸ்டாலின் சொன்ன பதில்…

 

20 நிமிட சந்திப்பு.. 20 சீட் கேட்ட வைகோ.. ஸ்டாலின் சொன்ன பதில்…

ஸ்டாலின் தனக்கு எதிராக இருந்த காரணத்தினால் திமுகவை விட்டே விலகிப் போனது ஒரு காலம். அந்த வைகோ இப்போது ஸ்டாலினுடன் நெருக்கம் காட்டி வருகிறார். ஸ்டாலினும் வைகோவை மரியாதையாக நடத்துவதாக வைகோவே தனது நிர்வாகிகளிடம் சொல்லி பெருமைப்பட்டு வருகிறார்.

திமுகவில் இன்னும் கூட்டணி இறுதியாகாத நிலையில், யாருக்கு எத்தனை சீட் என்றும் இன்னும் பேச்சுவார்த்தை தொடங்கவில்லை. ஆனாலும், தனக்கு இத்தனை சீட் கொடுத்தால் நல்லா இருக்கும் என்று இப்போது ஒரு துண்டை போட்டிருக்கிறார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.

20 நிமிட சந்திப்பு.. 20 சீட் கேட்ட வைகோ.. ஸ்டாலின் சொன்ன பதில்…

கடந்த சில தினங்களுக்கு ஸ்டாலினை சந்தித்து எதிர்வரும் சட்டமன்ற தேர்தல் பணிகள், பிரச்சாரம் குறித்து பேசியிருக்கிறார் வைகோ. இருபது நிமிடங்கள் இந்த சந்திப்பு நடந்திருக்கிறது.

இந்த சந்திப்பு முடிந்து வெளியே வந்த வைகோவிடம் செய்தியாளர்கள் சந்திப்பு குறித்து கேள்வி எழுப்பியபோது, வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 200 இடங்களை பெறப்போவது உறுதி. அதனால், ஸ்டாலினிடம் வாழ்த்து சொல்ல வந்தேன். அப்படியே, நான் விரைவில் தேர்தல் பிரச்சாரத்தினை தொடங்கவிருப்பதையும் அவரிடத்தில் தெரிவித்தேன் என்று சொன்னார்.

20 நிமிட சந்திப்பு.. 20 சீட் கேட்ட வைகோ.. ஸ்டாலின் சொன்ன பதில்…

கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப்பங்கீடு குறித்து ஸ்டாலினிடம் பேசினீர்களா? என்ற கேள்விக்கு, அதுபற்றி எதுவும் இப்போது பேசவில்லை என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் வைகோ.

ஆனால், இந்த சந்திப்பிற்கு பிறகு வைகோ, மதிமுக நிர்வாகிகளிடம் மனம் திறந்து பேசியிருக்கிறார். அப்போது ஸ்டாலினுடன் தான் பேசியது குறித்து பேசிய வைகோ, திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும். அதற்காக பாடுபடவேண்டும் என்று துடிக்கிறார்கள் மதிமுகவினர். அதனால், வரும் தேர்தலில் 20 சீட்டாவது எங்களுக்கு ஒதுக்கினால்தான் நல்லா இருக்கும் என்று தோன்றுகிறது. கட்சியினரும் அப்பத்தான் உற்சாகமாக வேலை செய்வார்கள் என்று தன் நிலைமையை எடுத்துச்சொல்லி இருக்கிறார்.

அமைதியாக கேட்டுக்கொண்டிருந்த ஸ்டாலின், மத்த தலைவர்களிடம் பேசிவிட்டு சொல்கிறேன் என்று சொல்லி இருக்கிறார். இல்லை.. வாய்ப்பில்லை.. வாய்ப்பிருக்காது என்று சொல்லாமல், சொல்கிறேன் என்று சொன்னதால், நிச்சயம் 20 சீட் கிடைக்கும் நிர்வாகிகளிடம் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் வைகோ. எப்போதும் இல்லாதது போல் புது உற்சாகமாய், புது தெம்பாய் இருக்கிறாராம் வைகோ.