20 வருடங்களுக்கு பிறகு ஹாலிவுட் படத்திற்கு டப்பிங் கொடுத்த அரவிந்த்சாமி!

 

20 வருடங்களுக்கு பிறகு ஹாலிவுட் படத்திற்கு டப்பிங் கொடுத்த அரவிந்த்சாமி!

நடிகை அரவிந்த்சாமி 20 வருடங்களுக்கு பிறகு ஹாலிவுட் படத்திற்கு டப்பிங் கொடுத்துள்ளார். 

சென்னை: நடிகை அரவிந்த்சாமி 20 வருடங்களுக்கு பிறகு ஹாலிவுட் படத்திற்கு டப்பிங் கொடுத்துள்ளார். 

கடந்த 1994ம் ஆண்டு வெளியான அனிமேஷன் திரைப்படமான ‘தி லயன் கிங்’, படம் தற்போது மீண்டும் டிஸ்னி தயாரிப்பில் உருவாகிறது. 2016-ம் ஆண்டு வெளியான ‘ஜங்கிள் புக்’ போல, தத்ரூபமான கம்ப்யூட்டர் அனிமேஷனில் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் உருவாகியுள்ள இந்த படம் அடுத்த மாதம் 19ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் டப்பிங் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. ஒரு அனிமேஷன் திரைப்படம் என்றால் அந்த மொழியில் உள்ள பெரிய நடிகர், நடிகையை டப்பிங் கொடுப்பார்கள்.

lion

இந்த நிலையில்  இதில் சிம்பாவிற்கு நடிகர் சித்தார்த் குரல் கொடுத்துள்ளார். அதைத்தொடர்ந்து அந்த வரிசையில் தற்போது அரவிந்த் சாமியும் டிஸ்னியுடன் கை கோர்த்து டப்பிங் கொடுத்துள்ளார். மேலும் இவர் 20 வருடங்களுக்கு முன்னர் வெளியான ‘லயன் கிங் அனிமேஷன்’ படத்தில் வரும் சிம்பா கதாபாத்திரத்திற்கு டப்பிங் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

lion

இதுகுறித்து அவர் கூறியதாவது, ‘ஒரு கதாபாத்திரத்திற்கு டப்பிங் கொடுத்த டிஸ்னி என்னை அணுகியபோது நான் ஸ்கார் கதாபாத்திரத்திற்கு டப்பிங் செய்ய விரும்பினேன். அது எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம்’ என்று கூறியுள்ளார். 

மேலும் ‘ தி லயன் கிங்’ படத்தின் இந்தி டப்பிங் வெர்ஷனிற்காக ஷாரூக் கான் மற்றும் அவரது மகன் ஆர்யன் குரல் கொடுத்துள்ளனர்.