20 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்! – யோகி ஆதித்யநாத்தின் அதிர்ச்சி பதில்

20 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்! – யோகி ஆதித்யநாத்தின் அதிர்ச்சி பதில்

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக உத்தரப்பிரதேசத்தில் நடந்த போராட்டத்தில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இது குறித்து உத்தரப்பிரதேச சட்டமன்றத்தில் யோகி ஆதித்யநாத் பேசியதாவது, “போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் யாரும் உயிரிழக்கவில்லை.

சாக வேண்டும் என்ற நோக்கில் வருபவர் எப்படி உயிருடன் இருக்க முடியும் என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக உத்தரப்பிரதேசத்தில் நடந்த போராட்டத்தில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இது குறித்து உத்தரப்பிரதேச சட்டமன்றத்தில் யோகி ஆதித்யநாத் பேசியதாவது, “போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் யாரும் உயிரிழக்கவில்லை.

up-yogi.jpg1

கலவரம் செய்தவர்களின் துப்பாக்கிக் குண்டுகளால்தான் அவர்கள் உயிரிழந்தார்கள்.சாக வேண்டும் என்ற நோக்கத்துடன் வருபவர்கள் எப்படி உயிருடன் இருக்க முடியும். மக்களை சுட வேண்டும் என்ற நோக்கத்தோடு ஒருவர் இறங்கினால் அவர் உயிரிழப்பார்.சி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டங்களின் பின்னணியில் மிகப்பெரிய சதி உள்ளது” என்றார்.

up-yogi.jpg2

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களின் போது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது. ஆனால், போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தவே இல்லை என்று மாநில முதல்வர் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.