20 நாட்களில் வெங்காய விலை குறையும்- முதலமைச்சர் பழனிசாமி

20 நாட்களில் வெங்காய விலை குறையும்- முதலமைச்சர் பழனிசாமி

தமிழகத்தில் வெங்காய விளைச்சல் நன்றாக உள்ளதால் 20 நாட்களில் விலை குறையும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வெங்காய விளைச்சல் நன்றாக உள்ளதால் 20 நாட்களில் விலை குறையும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, “உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க திமுக தயங்குகிறது, அஞ்சுகிறது. உச்சநீதிமன்ற உத்தரவை வரவேற்றுவிட்டு மீண்டும் நீதிமன்றம் செல்கிறார் ஸ்டாலின். தேர்தலை எப்படியாவது தள்ளிப்போடுவது தான் ஸ்டாலினின் திட்டம். ஆனால் அதிமுகதான் தேர்தலை நடத்தவில்லை என சொல்லிக்கொண்டு வருகிறார்.

EPS

தமிழகத்தில் வெங்காய விளைச்சல் நன்றாக உள்ளதால் 20 நாட்களில் விலை குறையும். வரத்து குறைவால் வெங்காய விலை உயர்வு பிரச்னை நாடு முழுவதும் உள்ளது. உள்ளாட்சித் தேர்தல் யாரால் தள்ளிப்போகிறது என்பதை ஸ்டாலின் தெளிவுபடுத்திவிட்டார். அதிமுக கூட்டணி ஒன்றாக சேர்ந்து உள்ளாட்சித் தேர்தலை சந்தித்து அமோக வெற்றி பெறும்” எனக் கூறினார்.