20 தொகுதிகளிலும் போட்டியிட விஜயகாந்த்-க்கு வாய்ப்பு தந்தால் தேமுதிக போட்டியிட தயார்: பிரேமலதா விஜயகாந்த்

 

20 தொகுதிகளிலும் போட்டியிட விஜயகாந்த்-க்கு வாய்ப்பு தந்தால் தேமுதிக போட்டியிட தயார்: பிரேமலதா விஜயகாந்த்

20 இடைத்தேர்தலில் விஜயகாந்துக்கு போட்டியிட வாய்ப்பு தந்தால் தேமுதிக தேர்தலிலும் போட்டியிட தயார் என அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 

சென்னை : 20 இடைத்தேர்தலில் விஜயகாந்துக்கு போட்டியிட வாய்ப்பு தந்தால் தேமுதிக தேர்தலிலும் போட்டியிட தயார் என அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நடந்த தொழிற்சங்க பேரவை ஆலோசனைக் கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், ‘போக்குவரத்து, சத்துணவு தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினால் அதனை தேமுதிக ஆதரிக்கும். நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து தேர்தல் தேதிக்கு பிறகு அறிவிக்கப்படும். 20 இடைத்தேர்தலில் விஜயகாந்துக்கு போட்டியிட வாய்ப்பு தந்தால் தேமுதிக தேர்தலிலும் போட்டியிட தயார். சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை திறப்பு மூலம் உலக கவனத்தை இந்தியா தன்பக்கம் திருப்பி உள்ளது. உலகிலேயே உயர்ந்த சிலை என்பது இந்தியாவிற்கு பெருமை என்றாலும் இந்தச் சிலை திறப்பதாலேயே எல்லா பிரச்னைக்கும் தீர்வு கிடைத்துவிட்டதா என்ற கேள்வி எழுகிறது’ என்று கூறியுள்ளார்.

‘சிலையைத் திறந்ததுபோன்று மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் மோடி நிறைவேற்றினாரா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. வெறும் சிலை வைப்பதால் மட்டுமே இங்கு மக்கள் பிரச்னைகள் தீரப்போவதில்லை. இந்த சிலை வைத்ததன் மூலம் சர்தார் வல்லபாய் படேல் யார் என்பது பலருக்கு தெரிந்துள்ளது. சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை குறித்து தமிழ் மொழியில் தவறாக எழுதப்பட்டது கண்டனத்திற்கு உரியது’ என்று குறிப்பிட்டுள்ளார்.