20 தொகுதிகளிலும் இடைத்தேர்தலை சந்திக்க தயார்: கமல்ஹாசன் அறிவிப்பு

 

20 தொகுதிகளிலும் இடைத்தேர்தலை சந்திக்க தயார்: கமல்ஹாசன் அறிவிப்பு

தமிழகத்தில் காலியாக உள்ள 20 தொகுதிகளிலும் இடைத்தேர்தலை சந்திக்க தயார் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 20 தொகுதிகளிலும் இடைத்தேர்தலை சந்திக்க தயார் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கருணாநிதி, ஏகே போஸ் ஆகியோர் மறைவையடுத்து காலியாக உள்ள திருவாரூர், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட தொகுதிகள் மற்றும் 18 எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் காலியாக உள்ள அந்த தொகுதிகள் என தமிழகத்தில் மொத்தம் 20 தொகுதிகள் காலியாக உள்ளன. இந்த தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன.

இந்நிலையில், தமிழகத்தில் காலியாக உள்ள 20 தொகுதிகளிலும் இடைத்தேர்தலை சந்திக்க தயார் என மக்க நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தனது பிறந்தநாளான இன்று ரசிகர்களை சந்தித்த அவர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஊழலற்ற சுகாதாரமான அரசியல் தேவை என்பதில் தெளிவாக மக்கள் நீதி மய்யம் உள்ளது. அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் ஆர்வமாக உள்ளனர். 20 தொகுதிகளிலும் இடைத்தேர்தலை சந்திக்க மக்கள் நீதி மய்யம் தயாராக உள்ளது என்றார்.