20 எம்.பி செல்ஃபி கேமரா, ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் கொண்ட நோக்கியா ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

 

20 எம்.பி செல்ஃபி கேமரா, ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் கொண்ட நோக்கியா ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

இந்தியாவில் ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் மிட் ரேன்ஜ் ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

டெல்லி: இந்தியாவில் ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் மிட் ரேன்ஜ் ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்தியாவில் தனது மிட்-ரேன்ஜ் ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்ட நோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போனின் அப்டேட் வெர்ஷனாக இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இதில் 6.18 இன்ச் ஃபுல் ஹெச்.டி டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 710 10 என்.எம் பிராசஸர், ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

நோக்கியா 8.1 சிறப்பம்சங்கள்:

– 6.18 இன்ச் 2246×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் பியூர் டிஸ்ப்ளே

கார்னிங் கொரில்லா கிளாஸ் 3

ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 710 10 என்.எம். பிராசஸர்

அட்ரினோ 616 GPU

– 4 ஜி.பி. ரேம்

– 64 ஜி.பி. மெமரி

மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்

ஆன்ட்ராய்டு 9.0 பை

– 12 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல்-டோன் எல்.இ.டி. ஃபிளாஷ், 1/2.55″ சோனி IMX363 சென்சார், f/1.8, 1.4μm பிக்சல், OIS

– 13 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.2, ZEISS ஆப்டிக்ஸ்

– 20 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0

கைரேகை சென்சார்

– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், நோக்கியா OZO ஸ்டீரியோ ஆடியோ

டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி

– 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்

நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் புளு/சில்வர் மற்றும் ஐயன்/ஸ்டீல் ஆகிய நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ.26,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனுக்கான முன்பதிவு அமேசான் இணையதளத்தில் தொடங்கியுள்ளது. மேலும், டிசம்பர் 21-ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்படுகிறது. அறிமுக சலுகையாக ஏர்டெல் பிரீபெயிட் பயனர்களுக்கு 1000 ஜி.பி. கூடுதல் 4ஜி டேட்டா, போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு 120 ஜி.பி. கூடுதல் 4ஜி டேட்டா வழங்கப்படுகிறது. குறிப்பிட்ட சில வங்கி கார்டுகளுக்கு 10% கேஷ்பேக் அளிக்கப்படுகிறது. அத்துடன் சர்விஃபை வழங்கும் ஆறு மாதங்களுக்கு இலவச ஸ்கிரீன் ரீபிளேஸ்மென்ட் வசதி வழங்கப்படுகிறது.