Home விளையாட்டு கிரிக்கெட் 20 ஓவர் தொடரை வென்றது நியூசிலாந்து -நெருங்கி வந்து பறிகொடுத்த இந்தியா

20 ஓவர் தொடரை வென்றது நியூசிலாந்து -நெருங்கி வந்து பறிகொடுத்த இந்தியா

நியூசிலாந்து இந்திய அணிகள் இடையேயான இருபது ஓவர் தொடரின் இறுதிப்போட்டி ஹாமில்டன் நகரில் நடைபெற்றது .

20 ஓவர் தொடரை வென்றது நியூசிலாந்து -நெருங்கி வந்து பறிகொடுத்த இந்தியா

ஹாமில்டன்: நியூசிலாந்து இந்திய அணிகள் இடையேயான இருபது ஓவர் தொடரின் இறுதிப்போட்டி ஹாமில்டன் நகரில் நடைபெற்றது .

இரு XIகளிலும் தலா ஒரு மாற்றம் . நியூசிலாந்து அணியில் ஃபெர்குசனுக்கு பதில் புதுமுகம் ப்ளெய்ர் டிகெனெர் இடம்பெற்றார். இந்திய XIல் சஹாலுக்கு பதில் குல்தீப் யாதவ் இடம்பெற்றார் .

சிறிய அளவிலான மைதானத்தில் பவுண்டரிகளும் சிக்ஸர்களும் சர்வ சாதாரணமாக பறந்தன .நியூசிலாந்து இன்னிங்ஸில் மொத்தமாக 18 பவுண்டரிகளும் 10 சிக்சர்களும் வந்தன .

நியூசிலாந்து பேட்ஸ்மேன்களில் மன்றோ 72(40) 5×4 5×6 ,செய்ஃபெர்ட் 43(25) 3×4 3×6 மற்றும் டி கராண்ட்ஹோம் 30(16) 3×4 1×6 ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் அந்த அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 212 ரன்களை எட்டியது .

match

11 பந்துகளை எதிர்கொண்ட டேரல் மிட்செல் (3 பவுண்டரிகளுடன் 19 ரன்கள் மற்றும் ஏழு பந்துகளை மட்டுமே சந்தித்த டெய்லர் (ஒரு பவுண்டரி ஒரு சிக்‌ஸருடன் 14 ரன்கள் ) ஆகியோர் கூட சரவெடி கொளுத்த தவறவில்லை .

இந்த இன்னிங்ஸில் , வில்லியம்ஸன் ஒருவர் மட்டுமே குறைவான ஸ்டரைக் ரேட் வைத்திருந்தவர் 21 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 27 ரன்கள் .

குல்தீப் யாதவ் இரு விக்கெட்டுகளை கைப்பற்றினார் .கலீல் ஆஹமத் மற்றும் புவனேஸ்வர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர் .குல்தீப் (ஓவருக்கு 6.2 ரன்கள் ) தவிர மற்ற அனைத்துப் பந்துவீச்சாளர்களும் கடும் தாக்குதலுக்கு ஆளாகினர் .

213 ரன்களை துரத்திய இந்திய அணிக்கு ,தவன் ,சான்ட்னர் முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார் .ஜந்து பந்துகளை எதிர்கொண்ட தவன் ,ஒரே பவுண்டரியுடன் வெளியேறினார் .

கடந்த இரு ஆட்டங்களைப் போலவே இம்முறையும் 3ஆம் நிலையில் களமிறங்கிய விஜய் ஷங்கர் ,28 பந்துகளில் 5 பவுண்டரிகள் 2 சிக்‌ஸர்களுடன் 43 ரன்கள் எடுத்து ,சான்ட்னர் பந்துவீச்சில் டேரல் மிட்சில்லிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் .

match

அடுத்த விக்கெட்டாக ரிஷப் பண்ட் 12 பந்துகளில் 1 பவுண்டரி 3 சிக்ஸர்களுடன் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தபோது ஸ்கோர் 121/3(12.2) .இந்த விக்கெட்டை ஒரு ஃபுல் டாஸ் மூலம் கைகப்பற்றினார் டிகெனெர் .வில்லியம்ஸன் பிடித்த கேட்ச் அது .

அடுத்ததாகத் தான் சந்தித்த 32ஆம் பந்தில் 38 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார் ரோஹித் ஷர்மா .அப்போது இந்தியாவின் ஸ்கோர் 141/4 (14)

match

இதன் பிறகு ஹர்திக் 21 ரன்களிலும் தோனி 2 ரன்களிலும் ஆட்டமிழக்க ,குருணால் பண்டியா மற்றும் தினேஷ் கார்த்திக் இணை வெற்றியை நெருங்க வைத்தாலும் வெல்ல வைக்க முடியவில்லை .

இறுதியில் 6 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்த இந்தியா ,4 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று தொடரையும் இழந்தது. கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 11 ரன்களே வந்தன .ஓவரின் மூன்றாவது பந்தில் ஒரு ரன் எடுக்க வாய்ப்பிருந்தும் கார்த்திக் ஓடாத தருணம் என்பது திருப்புமுனையாக அமைந்தது .கோலின் மன்றோ ஆட்ட நாயகன் விருது பெற்றார் .டிம் செய்ஃபெர்ட் தொடர் நாயகன் ஆனார் .

20 ஓவர் தொடரை வென்றது நியூசிலாந்து -நெருங்கி வந்து பறிகொடுத்த இந்தியா
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

சுத்தி சுத்தி சுழன்று அடித்த பாக்ஸர் பூஜா ராணி… அதகளமாக காலிறுதிக்கு முன்னேறினார்!

ஒலிம்பிக் போட்டி தொடங்கிய முதல் நாளுக்குப் பிறகு ஒவ்வொரு நாளும் இந்திய வீரர், வீராங்கனைகள் தோல்வி என்ற செய்திகளே வட்டமடிக்கின்றன. ஆனால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நன்னாளாக இந்நாள் தொடங்கியிருக்கிறது....

கையாலாகாத அரசு காவல்துறை மூலம் மிரட்டுகிறது.. எஸ்.பி.வேலுமணி ஆவேசம்

கோவை குனியமுத்தூரில் முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி தலைமையில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து உரிமைக்குரல் முழக்க போராட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்ட...

“நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?” – அமெரிக்க வீராங்கனைக்கு ஆட்டம் காட்டிய தீபிகா குமாரி!

ஒலிம்பிக் பதக்க பட்டியலில் இந்தியா ஒரெயொரு வெள்ளிப் பதக்கத்துடன் 42ஆவது இடத்தில் நிற்கிறது. மற்ற நாடுகள் முன்னேறிச் சென்று கொண்டிருக்க இந்தியாவோ ஒவ்வொரு நாளும் பின்தங்கி வருகிறது. முதல் நாளில்...

அதிமுகவில் தற்போது காலியிடம் இல்லை…மாஃபா தடாலடி

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று உரிமைக்குரல் முழக்க போராட்டம் நடத்தியது அதிமுக. கட்சி நிர்வாகிகள் ஒவ்வொருவரும் தங்கள் வீட்டு முன்பாக நின்று திமுகவை...
- Advertisment -
TopTamilNews