20ம் தேதி முதல் ஆன்லைனில் செல்போன், டி.வி., பிரிட்ஜ் வாங்கலாம்…. வீடு தேடி பொருட்கள் வந்து விடும்..

 

20ம் தேதி முதல் ஆன்லைனில்  செல்போன், டி.வி., பிரிட்ஜ் வாங்கலாம்…. வீடு தேடி பொருட்கள் வந்து விடும்..

வரும் திங்கட்கிழமை (20ம் தேதி) முதல் செல்போன், டி.வி., பிரிட்ஜ் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்களை அமேசான், பிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் வர்த்தக தளங்களில் ஆர்டர் செய்து வாங்கலாம். உங்க வீடு தேடி பொருட்களும் வந்து விடும்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு கடந்த மாதம் 25ம் தேதி முதல் ஏப்ரல் 14ம் தேதி வரை 21 நாட்கள் நாடு முழுவதுமாக லாக்டவுனை அமல்படுத்தியது. மக்கள் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எச்சரிக்கப்பட்டனர். மேலும், மருந்து, மருத்துவ கருவிகள் மற்றும் உணவு ஆகிய அத்தியாவசிய பொருட்களை மட்டுமே விற்பனை செய்ய ஆன்லைன் நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டன. இந்நிலையில் கொரோனா வைரஸ்  பாதிப்பு தொடர்நது அதிகரித்து வந்ததால் லாக்டவுனை மே 3ம் தேதி வரை மேலும் 19 நாட்களுக்கு மத்திய அரசு நீட்டித்தது.

அமேசான்

அதேசமயம் மத்திய உள்துறை அமைச்சகம் இரண்டாவது கட்ட லாக்டவுனில் சில நிபந்தனைகளுடன் தளர்வை அறிவித்துள்ளது.  இரண்டாவது கட்ட லாக்டவுனில் 20ம் தேதி முதல் டி.வி., பிரிட்ஜ் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்களை விற்பனை செய்ய ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. அதேசமயம் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் டெலிவரிக்கு பயன்படுத்தும் வாகனங்களை சாலைகளை இயக்க அதிகாரிகளிடம் கட்டாயம் அனுமதி பெறவேண்டும்.

டோர் டெலிவரி

மத்திய அரசின் அறிவிப்பின்படி, வரும் 20ம் தேதி முதல் அமேசான், பிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் வர்த்தக தளங்களில் செல்போன், டி.வி., பிரிட்ஜ் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்களை ஆர்டர் செய்து வாங்கலாம். உங்க வீடு தேடி பொருட்களும் வந்து விடும். மத்திய அரசின் தளர்வு நடவடிக்கை வாயிலாக நீண்ட நாளைக்கு பிறகு வர்த்த நடவடிக்கைகள் சூடுபிடிக்கும் மற்றும் பல லட்சம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை பெறுவர்