போலீஸ் ஸ்டேஷனை ‘மாமியார் வீடு’ என்று கூறி டிக் டாக் செய்த இருவர் கைது!

போலீஸ் ஸ்டேஷனை ‘மாமியார் வீடு’ என்று கூறி டிக் டாக் செய்த இருவர் கைது!

புதுக்கோட்டை மாவட்டம் செம்பட்டிவிடுதி போலீசார் கடந்த 3 ஆம் தேதி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியே பாலையா என்ற இளைஞர் இருசக்கர வாகனத்தில் மாஸ்க் அணியாமல் வந்துள்ளார். இதனால் போலீசார் அவரின் வாகனத்தை பறிமுதல் செய்து வைத்து கொண்டனர். பாலையா வாகனத்தை கேட்டபோது, இரண்டு நபர்களை ஜாமீனுக்கு அழைத்து வந்து கையெழுத்திட்டு செல் பிறகு வாகனத்தை தருகிறோம் என்று கூறியுள்ளனர்.

போலீஸ் ஸ்டேஷனை ‘மாமியார் வீடு’ என்று கூறி டிக் டாக் செய்த இருவர் கைது!

இதை தொடர்ந்து பாலையா நெருஞ்சிபட்டியைச் சேர்ந்த தனது நண்பர்கள் வெற்றிவேல் மற்றும் மகேந்திரனை ஜாமீன் கையெழுத்து இடுவதற்காக அழைத்து வந்துள்ளார். இதை தொடர்ந்து ஜாமீன் கையெழுத்து போட்டுவிட்டு செல்லும் போது போலீஸ் ஸ்டேஷன் வாசலில் வெற்றிவேல் டிக் டாக் வீடியோ எடுத்துள்ளார். அதில் போலீஸ் ஸ்டேஷனை மாமியார் வீடு என்று சொல்லும்படியான வசனங்கள் இடம்பெற்றிருந்துள்ளது.

போலீஸ் ஸ்டேஷனை ‘மாமியார் வீடு’ என்று கூறி டிக் டாக் செய்த இருவர் கைது!

இதன் காரணமாக காவல் நிலையத்தை தவறாக சித்தரித்து டிக் டாக் வீடியோ பதிவிட்டு சமூக வலைதளங்களில் வெளியிட்டதால் வெற்றிவேல் மற்றும் நண்பர் மகேந்திரனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்