சந்தன மரத்தை கடத்த முயன்ற 2 இளைஞர்கள் கைது!

 

சந்தன மரத்தை கடத்த முயன்ற 2 இளைஞர்கள் கைது!

தர்மபுரி

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே சந்தன மரத்தை வெட்டி கடத்த முயன்ற 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். அரூர் வனப்பகுதியில் ஒரு சில இடங்களில் சந்தனமரம் உள்ளிட்ட மரங்களை வெட்டிக்கடத்துவதாக வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, மொரப்பூர் வனச் சரகர் சிவகுமார் தலைமையில் வனத்துறையினர் ரோந்து பணிகளை தீவிரப்படுத்தினர். அப்போது, அரூர் பொதுப்பணித்துறையினர் குடியிருப்பு அருகே  2 பேர் மரம் வெட்டுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அங்கு சென்ற வனத்துறையினர், அவர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர். கைதான இருவரிடமும் போலீசார் நடத்திய விசாரணையில், திருவண்ணாமலை மாவட்டம், நீப்பத்துறை என்கிற கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் கோவிந்தன்(26) என்பது, மாது மகன் முனியப்பன்(22) என்பதும் தெரிய வந்தது.

சந்தன மரத்தை கடத்த முயன்ற 2 இளைஞர்கள் கைது!

அவர்கள் வெட்டி கடத்துவதற்கு தயார் நிலையில் வைத்திருந்த சுமார் 3 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சந்தன மர கட்டைகளையும் பறிமுதல் செய்தனர். அவர்களிடமிருந்து இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்த வனத்துறையினர், இரண்டு பேர் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இவர்களிடமிருந்து இதற்கு முன் சந்தன மரங்களை வெட்டி விற்பனை செய்த விபரங்களையும் போலிசார் சேகரித்து வருகின்றனர்.