சாலையில் கொரோனா மாதிரிகள் சிதறிக் கிடந்த விவகாரம்; 2 ஊழியர்கள் டிஸ்மிஸ்!

சாலையில் கொரோனா மாதிரிகள் சிதறிக் கிடந்த விவகாரம்; 2 ஊழியர்கள் டிஸ்மிஸ்!

சேலத்தில் சாலையில் கொரோனா மாதிரிகள் சிதறிக் கிடந்த விவகாரத்தில் 2 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் 2 இடங்களில் கொரோனா பரிசோதனை முகாம்கள் நடத்தப்படுகின்றன. மருத்துவ முகாம்களில் எடுக்கப்படும் கொரோனா மாதிரிகள், பெத்தநாயக்கன் பாளையத்தில் இருந்து ஆத்தூருக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த நிலையில் தான், கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட வேண்டிய கொரோனா மாதிரிகள் கொத்தாம்பாடி சாலையில் சிதறிக்கிடந்தன. இந்த விவகாரம் சர்ச்சையை கிளப்பியது.

சாலையில் கொரோனா மாதிரிகள் சிதறிக் கிடந்த விவகாரம்; 2 ஊழியர்கள் டிஸ்மிஸ்!

இது குறித்து பேசிய சுகாதாரத்துறையினர், இரு சக்கர வாகனத்தில் பரிசோதனை முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்ட மாதிரிகளை செல்லும் வழியில் ஊழியர்கள் தவறவிட்டதாகவும், இது போன்ற நிகழ்வுகள் மீண்டும் நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்திருந்தனர்.

சாலையில் கொரோனா மாதிரிகள் சிதறிக் கிடந்த விவகாரம்; 2 ஊழியர்கள் டிஸ்மிஸ்!

இந்த நிலையில், சாலையில் கொரோனா மாதிரிகளை தவறவிட்டு அலட்சியமாக செயல்பட்ட தலைவாசல் தற்காலிக ஊழியர்கள் சரவணன், செந்தில் ஆகியோர் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர். நோய் பரப்பும் வகையில் நடந்து கொண்டதால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை விளக்கம் அளித்திருக்கிறது.